ஸ்ரீபுரம் ஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மன் திருக்கோவில் பொங்கல் உற்சவ விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழச்சின்னம்பட்டி பிரிவு ஸ்ரீ புரத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மன் திருக்கோவில் பொங்கல் உற்சாகப் பெருவிழா நடைபெற்றது

முதல் நாள் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது ஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மனுக்கு கொடியேற்றி கம்பம் சாட்டுதல் அம்மனுக்கு காப்பு கட்டுதல் எல்லைக் கொடி கட்டுதல் நிகழ்ச்சியும் கும்மி பாட்டு பெரியாற்றங்கரையில் சக்தி பூஜை செய்து அன்னை மாரியம்மன் சக்தி கரகம் எடுத்து பெரியஊர்சேரி பிரிவு கேட்டுகடை அலங்காநல்லூர், குறவன்குளம்பிரிவு, எரம்பட்டி பிரிவு, விஜயமங்கலம், கீழச்சின்னம்பட்டிபிரிவு, வழியாக வீதி உலா வந்து ஸ்ரீ ஜோதி செட்டி கருப்பசாமி ஆலயத்தில் இருந்து முளைப்பாரி உடன் கோவிலுக்கு அம்மன் வீதி உலா வந்தடைந்தது மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியாக மாவிளக்கு எடுத்தல் அக்கினி சட்டி கரும்பாலை தொட்டியில் எடுத்தல் அழகு குத்துதல் அங்கப்பிரவேசம் செய்தால் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் அன்று மதியம் இதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை அம்மன் பெரியாற்றங்கரை எழுந்தருளி பாராட்டு மற்றும் தீர்த்தவாரி வைபவம் நிகழ்ச்சியும் அன்று மாலை சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கேட்டுகடை வழியாக கோவிலை வந்தடையும் நிகழ்ச்சியும் திங்கட்கிழமை அம்மன் பொன்னூஞ்சல் உற்சவ நிகழ்ச்சியும் சாந்தி பூஜை செய்து பிறகு முளைப்பாரி சக்தி கரகம் ஆலயம் வந்து திருக்கோயிலாகத்தில் கரைக்கப்பட்டது அதனை தொடர்ந்து மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சியும் கோவிலில் கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா இனிதே நிறைவு பெற்றது

இவ்விழா ஏற்பாடுகளை
ஸ்ரீநிதிஅம்மா, செய்திருந்தார் இதில் பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *