அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கோரியம்பட்டி கிராமத்தில் மறைந்த நல்லாசிரியரும், TMT நிறுவனங்களின் தலைவருமான தங்கவேல் ஆசிரியர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் திருவுருவச்சிலை திறப்பு விழா நடைபெற்றது

இந் நிகழ்ச்சிக்கு இலையூர் ஊராட்சி மன்ற தலைவர் TMT. அறிவழகன் வரவேற்புரை ஆற்றினார், TMT செந்தில், TMT குமார் , TMT சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

TMT குடும்பத்தினர் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நல்லாசிரியர் அய்யம்பெருமாள் அவர்கள் நல்லாசிரியர் மற்றும் TMT நிறுவனர் M.தஙகவேலு அவர்களின் சிலையினை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்,

இதில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க கண்ணன், ஜெயங்கொண்டம் ஒன்றிய பெருந்தலைவர் KPN.ரவி, பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் சின்னதுரை, திமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி, தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர் கே கலியபெருமாள், எம் ஆர் கல்லூரி நிறுவனங்களின் தாளாளர் ரகுநாதன், நல்லாசிரியர் சின்னசாமி, நல்லாசிரியர் வீராசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் அய்யாதுரை, ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் JKN ராம ஜெயலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் நல்லாசிரியர் தங்கவேலு அவர்களின் வாழ்க்கை குறித்தும் பணியை பற்றியும் செய்த தொண்டுகள், ஏழை எளிய மக்களுக்கு செய்த உதவிகளையும் எடுத்துரைத்தனர். இதில் சுவாமிமலையை சேர்ந்த சிற்பி இளங்கோவனை கௌரவித்து பாராட்டுகளை தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 1500 க்கும் மேற்பட்டோருக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுமார் 2000-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிறைவாக பாமக முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் TMT திருமாவளவன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *