புதுச்சேரிபுதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் தொண்டன் நாக. சத்தியசீலன் தனி நபராக உண்ணாவிரதப் போராட்டத்தால் பரபரப்பு எஸ் சி எஸ் டி மாநில தலைவர் நியமனத்தை கண்டித்து புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தனிநபர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதியைச் சேர்ந்த ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்த நாக .சத்தியசீலன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது மாணவர் பருவத்தில் இருந்து நான் காங்கிரஸ் கட்சியில் உழைத்துக் கொண்டிருக்கிறேன் என்றும், ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த நான் ஏம்பலம் தொகுதியைச் சேர்ந்தவன் என்றும் 1995 இல் இருந்து 2024 வரை 29 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு உண்மையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன்

இந்த கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளேன் என் 1997 முதல் 2000 வரையிலான காலகட்டத்தில் மாணவர் காங்கிரஸில் ஏம்பலம் தொகுதி தலைவராக செயல்பட்டேன் அதன்பிறகு இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளராகவும் பணியாற்றியுள்ளேன் கந்தசாமி அவர்கள் பாகூர் தொகுதியில் இருந்து ஏம்பலம் தொகுதிக்கு மாறிய போது அவரின் வெற்றிக்காக பாடுபட்டேன் மாநிலம் முழுவதும் கட்சிக்காக மைக் மூலம் பிரசாரம் செய்துள்ளேன்

நான் சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக அயராத உழைப்பையும் தந்துள்ளேன் இதனால் மாநில முழுவதும் பொதுமக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவன் நான் அது மட்டுமல்லாது இந்த கட்சிக்காக பல்வேறு வழக்குகளை சந்தித்துள்ளேன் சமீபத்தில் ஏம்பலம் தொகுதியில் இருந்து 2023 இல் 1500க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களை கட்சிக்காக சேர்த்துள்ளேன்

நான் நலிந்த பிரிவினரின் நலனுக்காக இலவச கணினி பயிற்சி மையத்தையும் நடத்தினேன் இதனால் பல்வேறு மாணவர்கள் பயன்பெற்றார்கள் பாஜக அரசுக்கு எதிராக அனைத்து போராட்டங்களிலும் தீவிரமாக பங்கேற்று பாஜக அலுவலகத்தை தாக்கியதற்காக என் மீது வழக்கும் பதியப்பட்டது

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் அவர்களும் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவருமான வைத்தியநாதன் அவர்களும் எனக்கு பரிந்துரை கடிதம் கொடுத்திருக்கிறார்கள் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கட்சியின் அனுபவம் திறமை காங்கிரஸ் பற்றாழன் என்ற முறையில் என்னை மாநில எஸ் சி எஸ் டி தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் அல்லது கட்சிக்காக உழைத்த வேறு எந்த நபரையாவது நியமிக்க வேண்டும் என்றும் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *