தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 71 வது பிறந்த நாள் மாவட்ட தொ.மு.ச.சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம். திராவிட முன்னேற்ற கழக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பனிமனை நுழைவு வாயில் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன

இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக தொமுச கிளை கழக செயலாளர் சேகர் அனைவரையும் வரவேற்றார் தொமுச போக்குவரத்து கழக கிளைத்தலைவர்
விஸ்வநாதன் தலைமையிலும் பொருளாளர் ரவிச்சந்திரன் மத்திய சங்கம் முன்னாள் துணை பொதுச் செயலாளர் கலியபெருமாள் தொமுச மாவட்டக் கவுன்சில் பொருளாளர் தமிழரசன்‌ ஆகியோர் முன்னிலையில் மத்திய சங்க அலுவலகச் செயலாளர் எல்.கணேசன் கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தார் நிகழ்ச்சியில் பனிமனை தொமுச நிர்வாகிகள் மற்றும் அனைத்து சங்க உறுப்பினர் களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்
விழா ஏற்பாடுகளை அறிவழகன் சோம சுந்தரம் செய்திருந்தனர் இறுதியாக ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *