தமிழ் சேவா சங்கம் மற்றும்
மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து கண் சிகிச்சை முகாம்.

நூற்றுக்கணக்னோர் பயன் அடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கம் கோணுழாம்பள்ளம் அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் தமிழ் சேவா சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் திருப்பனந்தாள் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்றது.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அபினேஷ் தலைமையில் தமிழ் சேவா சங்க அறங்காவலர் சு.பா. ஞானசரவணவேல், கண் மருத்துவ நிபுணர்கள், மற்றும் தமிழ் சேவா சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

முகாமில் பார்வை குறைபாடு, கண்புரை, கண்ணில் நீர் வடிதல், கண் அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். கண்புரை நோய்க்கு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச லேசர் போக்கோ
லென்ஸ் சிகிச்சை, தனியார் மருத்துவமனையில் கண்புரை சிகிச்சை செய்து கொண்ட கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு சலுகை கட்டணத்தில் கண் கண்ணாடி வழங்குதல், கண் நோய்க்கு இலவச மருத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இலவச ரத்த அழுத்த மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *