அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் ரூபாய் 75 லட்சம் பல்வேறு அரசு கட்டிடங்களை வெங்கடேசன் எம் எல் ஏ திறந்து வைத்தார்

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏழு ஊராட்சிகளில் ரூபாய் 75 லட்சம் மதிப்பிலான அரசு கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது .

இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு பணி முடிக்கப்பட்ட அங்கன்வாடி, சமுதாயக்கூடம், நாடக மேடை, கூடுதல் அரசு பள்ளி கட்டிடம் , உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்தார். வலையபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ராம கவுண்டன்பட்டி கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ரூபாய் 9.13 லட்சம் செலவில் பொது விநியோக கடை , வடுகபட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021- 2022 க்கான அங்கன்வாடி கட்டிடம், ரூபாய் 8.67 லட்சம் செலவிலும்.
புதிய பல்பொருள் அங்காடி, பொது விநியோக கட்டிடம் ரூபாய் 8.67 லட்சம் செலவிலும்,
பெரியஊர்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னஊர்சேரி கிராமத்தில் நாடக மேடை ரூபாய் 7.50 லட்சம் செலவில், பண்ணை குடி ஊராட்சியில் 24 லட்சம் மதிப்பீட்டில் அரசு பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. தண்டலை ஊராட்சியில் ஆதிதிராவிடர்கான சமுதாயக்கூடம் 15 லட்சம் செலவில் பூமி பூஜை பெரியஇலந்தைக்குளம் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டிடங்களை சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, பிரேமராஜன், ஒன்றிய குழு தலைவர் பஞ்சுஅழகு, துணைத் தலைவர் சங்கீதாமணிமாறன், பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், துணைத்தலைவர் சுவாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் காயத்ரிஇதயச்சந்திரன், பாலமுருகன், செந்தில்குமார்,
தேவிமகேந்திரன், மலர்க்கொடிதமிழரசன், வீரலட்சுமி ஜெயக்குமார், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், அருண்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனுஷ்கோடி, ஒன்றிய கவுன்சிலர் தங்கதுரை, மற்றும் திமுக நிர்வாகிகள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அன்புமுத்து, கண்ணன், பண்ணைகுடி இருளாண்டி,
சின்ன ஊர்சேரி தியாகு ,இளைஞர் அணி ஆனந்த்,, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *