மன்னார்குடி அருகே இலவச பயிற்சி மையத்தில் மாநிலத்தில் 33பேரில் பங்கேற்று தேர்ச்சி பெற்ற வட்டார கல்வி அலுவலருக்கு பாராட்டு விழா…

மன்னார்குடி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தென்பரை இலவச பயிற்சி மையத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்காக நடத்திய தேர்வில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து ஒருவராக தேர்ச்சி பெற்றார்.

இவர் திருத்துறைப்பூண்டி வட்டம் குன்னூர் கிராமத்தைச் சேர்ந்த தென்பரை இலவச பயிற்சி மையத்தில் பயின்ற பெ. ஜான்சி எமிலி தேர்வு பெற்று கடந்த ஜனவரி 29 ஆம் தேதி மதுரையில் நடந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் பணிநியமன ஆணை பெற்றார்.

இந்நிலையில் மன்னார்குடி வட்டார கல்வி அலுவலராக பணியில் சேர்ந்த இவருக்கான பாராட்டு விழா தென்பரை இலவச பயிற்சி மையத்தில் திருவாரூர் மாவட்ட முன்னாள் சதுரங்கக் கழகத் தலைவர் சாந்தகுமார் தலைமையிலும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜகோபால், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாராயணசாமி முன்னிலையிலும் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயலாளர் சண்முகவடிவேல், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். பயிற்சி மையத்தின் இயக்குனர் வைரமுத்து போட்டித் தேர்வாளர் கடந்து வந்த கடினமான பாதைகளை எடுத்துரைத்தார்.

மாநிலத்தில் 33 பேரில் ஒருவராக தேர்ச்சி பெற்ற ஜான்சி எமிலி கூறுகையில் “குடும்பப் பெண்ணாக இருந்து பல சவால்களை எதிர்கொண்டு ஒரே இலக்குடன் கடினமான உழைப்பை மேற்கொண்டதால் என்னால் இந்த இடத்தை அடைய முடிந்தது.

நீங்கள் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையோடும் தொடர் முயற்சியோடும் பயிற்சியை மேற்கொண்டால் நிச்சயம் உங்களாலும் அரசு பணியை அடைய முடியும். என்னுடைய வளர்ச்சிக்கு தென்பரை இலவச பயிற்சி மையம் சிறந்த வழிகாட்டியாக அமைந்தது” என்றார்.

இந்நிகழ்ச்சியில் சமுதாயக் குழுமத்தின் செயலாளர் மணிவண்ணன்,ஜெபர்சன் தங்கையா மற்றும் 100 போட்டித் தேர்வர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பயிற்சி மைய நிறுவனர் சுப்ரமணியன் அனைவரையும் வரவேற்றார். சமுதாய குழுமத்தின் பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *