திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமாகிய மு. க.ஸ்டாலின் 71-வது பிறந்த தினத்தை முன்னிட்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு நகர செயலாளர் பா. சிவனேசன் தலைமை வகித்தார், வலங்கைமான் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து, இனிப்புகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் வலங்கைமான் பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், துணைத் தலைவர் க. தனித்தமிழ்மாறன், கிழக்கு ஒன்றிய பொருளாளர் நல்லம்பூர் கிருஷ்ணமூர்த்தி, நகர இணைச் செயலாளர் ரவிச்சந்திரன், எஸ். ஆர். ராஜேஷ் உள்பட கட்சி நிர்வாகிகள்,பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், அணி பொறுப்பாளர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோன்று வலங்கைமான் கிழக்கு ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சி உள்பட அனைத்து ஊராட்சிகளிலும் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி,ஒன்றிய பொருளாளர் நல்லம்பூர் கிருஷ்ணமூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள் அனைத்து ஊராட்சி கிளைகளில் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *