பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் கல்வியியல் கல்லூரியில் மாணவிகளின், மகளிர் தின கொண்டாட்ட விழா நிகழ்ச்சி..

காண்போரை அசத்தும் வகையில் பாடலுக்கு ஏற்ப குத்தாட்டம் போட்ட மாணவிகள்..தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் உள்ள ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில், மகளிர் தின கொண்டாட்டம் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரியின் மாணவிகள் வாழ்க்கையில் பெண்களின் முன்னேற்றம், ஒற்றுமை, உட்பட பல்வேறு தலைப்புகளில் பேசியும், கவிதைகளைப் படித்தும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாபநாசம் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்குழலி கபிலன் மாணவிகள் மத்தியில் பாடல்களைப் பாடி அசத்தினார். தொடர்ந்து நடைபெற்ற டான்ஸ் நிகழ்ச்சிகளில், பாடலுக்கு ஏற்ப குத்தாட்டம் போட்டு, கல்லூரி மாணவிகள் மகளிர் தினத்தை கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் மில்டன் ராஜ் வரவேற்று பேசினார் கல்லூரி தாளாளர் கலியமூர்த்தி முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்.

இதில் கல்லூரி செயலாளர் ஜோதி கலியமூர்த்தி தலைமை தாங்கி மாணவர்களுக்கு சொற்பொழிவு ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பேராசிரியர் மகேஸ்வரி மற்றும் பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

மேலும் மாணவ மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் மில்டன்ராஜ் மற்றும் உதவி பேராசிரியர் சரவணன் ஆகிய வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியை கல்வியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி சுபாஸ்ரீ தொகுத்து வழங்கினார்.

தொடர்ந்து மாணவிகள் கைகளை தட்டியவாரும் ஆரவாரம் செய்தனர். இந்த நிகழ்ச்சி காண்போரை ரசிக்கும் வகையில் அமைந்து இருந்தது.

முடிவில் கல்வியல் கல்லூரி முதலாமாண்டு மாணவி ஜருசிகா நன்றியுரை ஆற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *