ஓ என் ஜி சி காவேரி அசட் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியில் சுமார் 40 லட்சம் மதிப்பில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் இரண்டு பள்ளி கட்டிடங்கள் திறப்பு

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட தியாகராஜபுரம் ஊராட்சி தாழைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ஓ.என்.ஜி.சி நிதியில் சுமார் 19 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பு புதிய. கூடுதல் கட்டிடத்தினை ஓ.என்.ஜி.சி செயல் இயக்குனர் மற்றும் கொரடாச்சேரி ஒன்றிய குழுத்துணைத்தலைவர் பாலசந்தரன் முன்னிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ திறந்து வைத்தார்

மாவட்ட ஆட்சியர் பேசும்போது ஓ.என்.ஜி.சி
நிறுவனம் கல்வி மருத்துவம் விவசாயம் சார்ந்த ஆகாய தாமரை அகற்றுதல் போன்ற பணிகளிக்கும் சமுக பொறுப்புணர்வு திட்டத்தில் நிதியை ஒதுக்கீடு செய்து சமூக பணிகளை செய்து வருவதாக பாராட்டினார் வரும் நிதியாண்டிலும் இத்தகைய பணிகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்

அதனைத் தொடர்ந்து கொரடாச்சேரி ஒன்றியம் காப்ணாமங்கலம் ஊராட்சியில் விவேகானந்தா அரசு உதவிபெரும் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடத்தை சுமார் 20 இலட்சம் மதிப்பீட்டில் கொரடாச்சேரி ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசந்தர் முன்னிலையில்
ஓ.என்.ஜி.சி செயல் இயக்குனர் உதய்பஸ்வான் திறந்து வைத்தார்

இயக்குனர் உதய்பஸ்வான் பேசும் போது மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார் மேலும்
இரண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்களுக்கும் தேவையான இருக்கை வசதி களை ஒருமாதத்திற்குள் ஏற்படுத்தி தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
நிகழ்வின்போது ஓ.என்.ஜி.சி குழு பொதுமேலாளர் பி .என். மாறன். முதன்மை பொதுமேலாளர் (மனிதவளம்)
கனேசன் ஆகியோர் பேசினர் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகளிலும் உயர்அதிகாரிகள் செல்வகுமார் சுதிஷ்,சுந்தரம் சுபாஷ்,சரவணன் பிரபாகர்
சமுக பொறுப்புணர்வு திட்ட அதிகாரிகள் விஜய் கண்ணன் சந்திரசேகரன் கல்வி
அதிகாரிகள் சுமதி விமலா மாவட்ட குழு உறுப்பினர் ராஜேஸ்வரி ஜெகஜீவன்ராம் ஊராட்சி தலைவர்கள் மகேந்திரன் பானுமதி தனபாலன் ஒன்றிய கவுன்சிலர்கள் உமாமகேஷ்வரி ராஜா சத்தியேந்திரன்
தலைமை ஆசிரியர்கள் தேன்மொழி கவிதா
தாளாளர் சாவித்ரி வழக்கறிஞர் தீபன்ராஜ்
மாணவ மாணவியர் பொதுமக்கள்
ஆகியோர் கலந்து கொண்டனர்

நிகழ்வினை முருகானந்தம் ஒருங்கிணைத்தார்
வடமழை கே.ஆர்.டி.ஸ் என் ஜி ஓ மற்றும்
கடலூரை சேர்ந்த முதியோருக்கான முதியோர் அமைப்பு போன்ற என் ஜி ஓ கல் இரண்டு கட்டிடங்களையும் கட்டியது பொதுமக்களும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை பாராட்டினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *