ஜெயங்கொண்டம் அடுத்த கண்டியன்கொல்லை கிராமத்தில் வைக்கோல் போர் திடீரென்று தீப்பற்றி எரிந்ததில் பத்தாயிரம் மதிப்புள்ள வைக்கோல் முற்றிலும் எரிந்து நாசமானது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கண்டியன்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் விவசாயி ஆவார் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மாடுகளுக்கு தீவனம் 10,000 மதிப்புள்ள வைக்கோல் வாங்கி வீட்டின் முன்பு போர் அமைத்து வைத்துள்ளார் இந்நிலையில் சுமார் மாலை நான்கு மணி அளவில் வைக்கோல் போர் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.

இதை கவனித்த சுப்பிரமணியனின் மனைவி கலா கூச்சலிட்டுள்ளார் உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நிலைய அலுவலர் ராஜா அவர்களின் தலைமையில் 10 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மல மலவென்று கொழுந்து விட்டு எரிந்த தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இருப்பினும் வைக்கோல் போர் முற்றிலும் எரிந்து நாசமாயின.

இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ராமராஜன் தலைமையிலான போலீசார் வைக்கோல் போருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனரா அல்லது நாச வேலை காரணமா என்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பாலசுப்பிரமணியன் மகன் விஜய் குடும்ப சண்டையின் காரணமாக தீ வைத்திருக்கலாம் என பல கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் திடீரென்று தீப்பற்றி எரிந்த வைக்கோல் போரினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *