சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாக்காக பந்தல் அமைக்கும் பணிக்கு முன்னதாக முகூர்த்தக்கால் பூஜை நடைபெற்றது

சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை ஒட்டி கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு முன்புறம் முகூர்த்தக்கால் நடுவதற்கு முன்பு பண்ணாரி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை தொடர்ந்து முகூர்த்தக்கால் நடுவதற்கு பூஜை நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பண்ணாரி கோவில் துணை ஆணையர் மேனகா தலைமை வகித்தார் இதில் பரம்பரை அறங்காவலர்கள் கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர் இது குறித்து பண்ணாரி மாரியம்மன் கோயில் துணை ஆணையர் மேனகா கூறியதாவது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா 11. 3. 24 முதல் 1.4.24 வரை நடைபெறுகிறது 11ஆம் தேதி திங்கள் இரவு திருப்பூச்சாட்டுடன்
குண்டம் திருவிழா துவங்குகிறது 19ம் தேதி திங்கட்கிழமை இரவு திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது 25ஆம் தேதி திங்கள் இரவு 26 ஆம் தேதி செவ்வாய் அதிகாலை 4 மணி அளவில் பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி அன்று மாலை கால்நடைகள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி 27ஆம் தேதி இரவு புஷ்ப பல்லாக்கில் பண்ணாரி மாரியம்மன் திருவீதி உலா 28ஆம் தேதி மஞ்சள் நீராட்டு
29 ஆம் தேதி வெள்ளி தங்க ரதம் புறப்பாடு ஏப்ரல் 1ஆம் தேதி திங்கள் மறுபூஜை நடைபெறுகிறது இதற்காக பண்ணாரி கோவில் வளாகத்தில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் சதுர அடிக்கு தீப்பிடிக்காத தகரக் கொட்டகை அமைக்கப்படும் அதேபோல இந்த ஆண்டும் திருவிழாவிற்கும் நாளை முதல் தகரக் கொட்டகை அமைக்கும் பணி நடைபெறுகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார் குண்டம் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் மேனகா தலைமையில் அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *