திருவாரூர் அருகே சிறப்பு படையினர் நடத்திய அதிரடி மதுவிலக்கு வேட்டையில் சிக்கிய 1600-க்கு மேற்பட்ட பாண்டிச்சேரி மாநில மதுபாட்டில்கள், எதிரிகள் இரண்டு நபர் கைது இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

நடைபெறவிருக்கும், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்டை மாநிலமான பாண்டிச்சேரி காரைக்கால் மாவட்டத்திலிருந்து சட்டவிரோதமான மதுக்கடத்தலை முற்றிலும் தடுக்கும் பொருட்டு, அண்டை மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும், சுழற்சி முறையில் காவல் உதவி ஆய்வாளர்களின் தலைமையில் தனிப்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு சோதனைச்சாவடி வழியாக வரும் வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது

மாவட்ட காவல் கண்காணிப்பளார் எஸ் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர்கள் சந்தோஷ்குமார், வைரமணி இளங்கோவன் மற்றும் 4).திரு.கோபிநாத் ஆகியோர்களின்
தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அண்டை மாநில மதுபான கடத்தலில் ஈடுபடுபவர்களை
கண்டறிந்து கைது செய்திட உத்தரவிடப்பட்டது.

காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி மேற்பார்வையில் மேற்படி தனிப்படையினர், இரவு முழுவதும் மேற்கொண்ட தீவிர சோதனையில், பாண்டிச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்திலிருந்து பேரளம் காவல் நிலைய சரக எல்லை வழியாக சட்டவிரோதமாக மது கடத்தி வந்த – மயிலாடுதுறை மாவட்டம், பொறையார், தத்தங்குடி, பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரின் மகன் பாபு (வயது-31) என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த பாண்டிச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர
வாகனத்தினையும் உதவி ஆய்வாளர் வைரமணி தலைமையிலான
தனிப்படையினர் கைப்பற்றினர்

அதேபோல், காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்படி காவல் நிலைய பகுதிகளில்
நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில் சட்ட விரோதமாக பாண்டிச்சேரி மாநில மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த களப்பால் பட்டமடையான் கோவில் பகுதியை சேர்ந்த புலவேந்திரன் என்பவரின் மகன் சௌந்தரபாண்டியன் (வயது-42) என்பவர் கைது செய்யப்பட்டு, விற்பனைக்காக அவர் வைத்திருந்த பாண்டிச்சேரி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது

திருவாரூர் மாவட்டத்தில் விடிய, விடிய அதிரடி சோதனை நடத்தி மதுபான கடத்தலுக்கு பயன்படுத்திய 2-இருசக்கர வாகனங்கள் மற்றும் சுமார் 1600-க்கும் மேற்பட்ட பாண்டிச்சேரி மாநில மதுபாட்டில்களையும் கைப்பற்றிய காவல்துறையினரின் சிறப்பான பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்

திருவாரூர் மாவட்டத்தில் இச்சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவர் என்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச்சட்டதின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *