திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேர் விழா-2024 முன்னிட்டு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேர் விழா-2024 முன்னிட்டு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் முன்னிலையில் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேரோட்டமானது (21.3.2024) நடைபெறவுள்ளது
தேரோட்டத்தினை முன்னிட்டு துறைவாரியாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதன்படி காவல்துறை பொருத்தமட்டில் தேர் கட்டுமானப் பணிகளுக்காக ஐந்து தேர்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்து தருதல் தேரோட்டம் நடைபெறும் போது தேருக்கு முன்னும் பின்னும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தருதல் குறித்தும் வீதிகளிலும், திருக்கோயிலுக்குள்ளும்கமலாலயம் குளக்கரையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தருதல் போக்குவரத்து சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளும் நகராட்சி நிர்வாகத்திற்கு தேர் விழாவினை முன்னிட்டு அதிகபடியான பக்தர்கள் வருகை இருக்குமாதலால் குடிநீர் இணைப்புகளில் தேர்விழா நாளுக்கு இரண்டு நாள் முன்னதாகவும் இரண்டு நாள் பின்னதாகவும் கூடுதலாக ஒரு மணி நேரம் தண்ணீர் வழங்குதல் நான்கு வீதிகளிலும் குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி செய்து தருதல் குறித்தும் திருக்கோயிலுக்குள் கூடுதலாக சுகாதார ஏற்பாடுகள் செய்து தருதல் உள்ளிட்ட பணிகள் குறித்தும், தீயணைப்புத் துறையினர் தேர் வீதிகளில் வரும்போது தேருக்கு பின்னால் அனைத்து வசதிகள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய தீயணைப்பு வண்டி, ஒன்றினை தேரினை தொடர்ந்து வர செய்ய ஏற்பாடு செய்வது குறித்தும் மின்சார வாரியத்துறைக்கு தேர் திருவிழா நாளுக்கு மூன்று நாள் முன்னும் மூன்று நாள் பின்னும் நகருக்கு உள்ளும் திருக்கோயிலுக்குள்ளும் மின்சாரம் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்து தருதல் தேரோடும் வீதிகளில் புதிதாக மின் கம்பம் நடும்போது தேரோட்டத்திற்கு இடையூறின்றி அமைத்து தருதல், நெடுஞ்சாலைத் துறைக்கு தேரோடும் வீதிகளில் நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பில் உள்ள வீதிகளில் அமைந்துள்ள மரக்கிளைகள் தேர் துணிகளையும், தொம்பைகளையும் சேதப்படுத்தாத வகையில் அவற்றினை அகற்றுதல் தேரோட்டத்திற்கு சாலை தகுதி சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பணிகளும் வேளாண்மை பொறியியல் துறை தேர் விழாவிற்கு புல்டோசர்கள் வழங்கிடுதல் குறித்தும் மருத்துவத்துறையின் சார்பில் தேர்விழா நாளுக்கு மூன்று நாட்கள் முன்னும் மூன்று நாட்கள் பின்னும் திருவாரூர் மாவட்ட மருத்துவமனையில் பகல் இரவு முழுவதும் கூடுதலாக மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிபுரிய ஏற்பாடு செய்து தருதல் குறித்தும் அரசு போக்குவரத்து கழகம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பொது மக்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு எளிதாக திரும்பிச் செல்லும் வகையில் சிறப்பு பேருந்து வசதி செய்து தருதல் குறித்தும் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கான பணிகளும் கலந்து ஆலோசிக்கப்பட்டு திருக்கோவில் ஆழித்தேரோட்டத்தை சிறப்பாக நடத்திட உரிய நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன் இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.திலகம், உதவி ஆணையர் இந்து சமய அறநிலையத்துறை ராமு, வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா (திருவாரூர்) செல்வி.கீர்த்தனா மணி (மன்னார்குடி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தமிழ்மணி பரம்பறை அறங்காவலர் ஸ்ரீதர், செயல் அலுவலர் அழகிய மணவாளன் உள்ளிட்ட அரசுதுறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *