தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை காலத்தை மூன்று வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகரில் கடும் வெயிலில் நின்றவாறு பணியாற்றும் போக்குவரத்து காவலர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு நாள்தோறும் காவலர்களுக்காக நீர் மோர், பழச்சாறு வழங்கும் நிகழ்வை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் துவக்கி வைத்தார்.
காவல்துணை ஆணையர் போக்குவரத்து குமார் உடன் இருந்தார். இந்நிகழ்வில் போக்குவரத்து உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்…