எஸ்.டி.பி.ஐ. கட்சி மதுரை மண்டலம் சார்பில் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்.

எஸ். டி. பி. ஐ. கட்சி மதுரை மண்டலம் சார்பில் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினரும் மதுரை மண்டல செயலாளருமான முஜிபுர் ரஹ்மான் தலைமையில் மதுரை வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மதுரை மண்டலத்திற்ககுட்பட்ட மாவட்ட தலைவர்கள் முன்னிலை வகித்தனர்..

கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாக ஆலோசனைகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *