கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் குடியிருப்பு வாசிகள் மீது பொருளதாரா தாக்குதல் நடத்தி வருவதாக பா.ம.கா குற்றசாட்டு.

தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் அறிக்கை.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை கும்பகோணம் என 2 மாநகராட்சிகள் உள்ளன. அதில் கும்பகோணம் மாநகராட்சி ஆனது காவிரி அரசலாறு 2 ஆறுகள் இடையே உள்ளது.

கும்பகோணம் மாநகராட்சியில் மட்டும் 48 வார்டுகள் உள்ளன. கும்பகோணம் மாநகராட்சியின் வளர்ச்சிக்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.

மேலும் அதற்கு ஏற்றவாறு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகளும் நடந்து வருகிறது. மாநகராட்சிக்கு கொடுக்கப்பட வேண்டிய பல்வேறு நிலைகளில் இருந்து வரக்கூடிய வரி உள்ளிட்ட வருவாய்கள் நிலுவையில் உள்ளன.

வரக்கூடிய வருவாய்கள் நிலையாக வந்தாலே பணியாளர்களை சம்பளம் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். இதனை அடிப்படையாகக் கொண்டு மாநகராட்சி நிர்வாக சார்பில் வரி மற்றும் வாடகைகள் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு உள்ளிட்டவற்றை துண்டிக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வரி மற்றும் வாடகை நிலுவை உள்ளவர்களிடம் குடிநீர் உள்ளிட்ட இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்து வருகின்றனர்.

இது குறித்து பா.ம.க. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பயிர்விளைச்சல் இல்லாமல் விவசாய தொழிலால் பாதிப்பு அடைந்தனர்.பண மதிப்பு இழப்பு கொரோனா காலத்தில் பலர் வேலையிழப்பைச் சந்தித்தனர். மேலும் அம்பானி, அதானி அல்லது டாடா பிர்லாகுடும்ப சேர்ந்தவர்கள் இல்லை. அன்றாடம் உழைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

மேலும் கும்பகோணம் நகரை சுற்றி எவ்வித வேலை வாய்ப்பும் இல்லாமல் குடியிருப்பு வாசிகள் தவித்து வரும் சூழலில் விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் வறுமை நிலையை எட்டி உள்ளனர்.

இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் அனைத்து வரிகளை உயர்த்தி நிலுவையில் உள்ளவர்கள் மீது பொருளதாரா தாக்குதல் நடத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் ஆங்கிலேயர் காலத்தில் வரிக்காக உப்பு தண்டி யாத்திரை சென்றதை விட கொடியது அன்றாட அத்திவாசிய குடிநீர் இணைப்பை துண்டிப்பது, வீட்டில் உள்ள கழிவுநீரை அடைப்பது இதனால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும்,
அருகில் குடியிருப்பு வாசிகளுக்கும் சுகாதார கேடுகளை ஏற்பட மாநகராட்சி நிர்வாகம் துணை நிற்கிறது.

பல்வேறு பொது பிரச்சனைகள் நிலுவையில் உள்ள நிலையில் இது போல் குடியிருப்புகளில் நிலுவை வைத்துள்ளவர்களிடம் நடவடிக்கை எடுப்பது எவ்வாறு நியாயமாகும். மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் வாடகை நிலுவைகள் ஏராளம் உள்ளன. அவற்றை வசூல் செய்தாலே மாநகராட்சிக்கு வருமான ஏராளம் இருக்கும்.

கும்பகோணம் மநகராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் திறமையற்ற நிர்வாக சீர்கேடுகளால் மாநகராட்சி வளர்ச்சி பெற முடியாத காரணத்தினால் இது போன்ற பொதுமக்கள் மீது நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் இவர்கள் மீது வன்மம் செய்யாமல் குடிமக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் குடியிருப்பு வாசிகளின் மீது நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

அதேபோல் வரிகள் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். மக்களின் வாழ்வாதாரங்களுக்கு கடுமையாக உழைத்து சிறந்த மநாகராட்சியாக விளங்க வேண்டும் என தெரிவித்துள்ளார் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *