தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் நலனில் மிகுந்த அக்கறையுடன் உரிய அரசாணைகளை புதிய மருத்துவ காப்பீடு திட்டம்-2021க்காக தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.

இம் மருத்துவ காப்பீடு திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட அரசு நிறுவனமான யுனைடெடு இன்சூரன்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

யுனைடெடு இன்சூரன்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் மூன்றாம் நபர் ஒப்பந்தம் மூலம் 18 மாவட்டங்களுக்கு MD India இன்சூரன்ஸ் நிறுவனத்திடமும், 20 மாவட்டங்களுக்கு Medi assist இன்சூரன்ஸ் நிறுவனத்திடமும் ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஆசிரியர், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் நலனில் அக்கறை கொண்டு கடந்த 2008-ம் ஆண்டு முதல் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மருத்துவக் காப்பீட்டு திட்டம் பல்வேறு வடிவில் பரிணாமம் பெற்று இன்றைய தமிழ்நாடு முதலமைச்சரால் பல்வேறு பலன்களைக் கொண்ட வடிவில் முழுமையாக கட்டணமில்லா சிகிச்சை என்ற அடிப்படையில் அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் யுனைடெடு இன்சூரன்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் செய்த நாள் முதல் இன்று வரை அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு முழுமையான மருத்துவக்காப்பீடு வழங்காமல் காப்பீடு என்ற பெயரில் பேக்கேஜ் அடிப்படையில் மிகக்குறைவான மருத்துவக் காப்பீட்டுத் தொகையை(20% முதல் 40% முடிய) மட்டும் வழங்கி வருகின்றது.

இது சார்ந்து விசாரிக்கும் பொழுது குறைந்த தொகையில் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், இதன் காரணமாகவே பேக்கேஜ் அடிப்படையில் குறைவான மருத்துவ காப்பீடு திட்ட தொகையை மட்டுமே வழங்க இயலும் என்றும் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து எங்களது இயக்கத்தின் சார்பில் தலையீடு செய்யும் பட்சத்தில் 60% வரை காப்பீடு தொகை வழங்கப்படுகிறது.

அத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் ஆசிரியர், அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களில் சிலர் மிகக் குறைந்த காப்பீடு வழங்கியுள்ளதை தெரிவிக்கும் போது, இது சார்பாக மூன்றாம் நபர் ஒப்பந்தம் பெற்றுள்ள MD India மற்றும் Medi assist இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களை தொடர் கொண்டு கூடுதலாக இயக்கம் சார்பில் காப்பீட்டுத் தொகை கோரினால், மருத்துவமனை நிர்வாகங்கள் சிகிச்சைக்கான செலவுத் தொகையை அதிகமாக கோரியுள்ளதாகவும், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நோயாளிகள் புகார் கொடுத்தால் மட்டுமே தங்களால் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று கூறி நழுவி விடுகின்றனர்.

மீண்டும் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற வேண்டும் என்ற அச்சத்தால் சம்மந்தப்பட்ட நோயாளிகள் புகார் கடிதம் அளிப்பதில்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு MD India மற்றும் Medi assist ஆகிய இரு நிறுவனங்களும் மருத்துவக் காப்பீட்டை முழுமையாக தராமல் ஆசிரியர் அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களை ஏமாற்றி வருகிறது.

அத்துடன் இது சார்ந்து யுனைடெடு இன்சூரன்ஸ் ஆப் இந்தியா மீது நிறுவனத்தின் முதன்மை மேலாளர் உஷாவை எங்களது மாநில அமைப்பின் சார்பில் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டால் ஒரு நாளும் தொலைபேசி அழைப்பை ஏற்பதில்லை.
மேலும், அரசாணையில் குறிப்பிட்டுள்ள கட்டணமில்லா சிகிச்சை என்பது ஆசிரியர், அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களுக்கு பகல் கனவாகவே இருந்து வருகின்றது.

அத்துடன் மிகக்குறைவான காப்பீடு வழங்கப்படுவதால் சிகிச்சை பிறகு மாவட்ட மருத்துவக்குழுவிற்கு விண்ணப்பம் செய்து மருத்துவ குழுவால் பரிந்துரை செய்யப்பட்ட பல்லாயிரம் விண்ணப்பங்கள் கடந்த ஆண்டுகளாக சென்னை யுனைடெடு இன்சூரன்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்தில் நடவடிக்கையாக காத்துக் கிடக்கின்றன.

இதனால் அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் ஓய்வூதியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அத்துடன் தங்களது மருத்துவ சிகிச்சைக்கான செலவுத்தொகையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மாவட்ட மருத்துவ குழு மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் மாவட்ட உயர்மட்டக்குழு மூலம் கிடைத்து விடும் என்று காத்திருந்த நிலையில், அரசு கூடுதல் செயலரின் கடிதமானது அரசாணைக்கு முரணாக நோயாளிகள் சிகிச்சைக்கான செலவுத் தொகையை பெறுவதற்கு அரசாணைகளின் படி மருத்துவ குழுவிற்கு அனுப்பாமல் நேரடியாக யுனைடெடு இன்சூரன்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு அனுப்பி 30 நாட்களில் நிவாரணம் பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப் பட்டுள்ள செய்தியானது அதிர்ச்சி அளிக்கின்றது.

யுனைடெடு இன்சூரன்ஸ் ஆப் இந்தியா மருத்துவச் சிகிச்சைக்காக காப்பீட்டுத் தொகையை குறைவாகத் தருகிறது என்று ஆசிரியர் அரசு உயர் மற்றும் ஓய்வூதியர்களால் புகார் உள்ள நிலையில், அதே யுனைடெடு இன்சூரன்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்திடமே மீண்டும் விண்ணப்பித்து நிவாரணம் தேட அறிவுறுத்தப்படுவ
தென்பது முரண்பாடாக உள்ளது.

ஆகவே, தமிழ்நாடு அரசின் உன்னத நோக்கமான கட்டணமில்லா சிகிச்சைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் யுனைடெடு இன்சூரன்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தின் மீது செயல்பாடுகளை முறையாகக் கண்காணித்து, மருத்துவமனைகள் அரசு ஊழியர் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர் களுக்கு நிர்ணயிக்கும் சிகிச்சைக்கான முழு தொகையையும் எவ்வித நிபந்தனை யுமின்றி வழங்கிட முதலமைச்சர் தமிழ்நாடு நிதித்துறைக்கு உரிய அரசாணைகளின் படி கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள உரிய வழிகாட்டுதல்கள் வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட செயலாளர் சீனிவாசன் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *