விழிப்புணர்வு ஊர்வலம்.

மதுரை அருகேதிருமோகூர் ஊராட்சி மன்றம், யானைமலை கிரீன் பவுண்டேஷன்,
ஏ.பி.ஆர் நகர் நல் வாழ்வு குழு இணைந்து
ஏ.பி.ஆர் நகரில் மட்கும் குப்பை, மக்கா குப்பை, புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் திருமோகூர் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.

நல்வாழ்வு குழு தலைவர் சித்திரசேனன் முன்னிலை வகித்தார். பிரபு வரவேற்றார்.ஊர்வலத்தை திருநங்கையர் ஆவண மைய இயக்குனர் பிரியாபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.ஊர்வலத்தில் மட்கும் குப்பை, மக்கா குப்பை, புகையிலை ஒழிப்பு குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. குப்பைகளை தரம் பிரித்துக் கொடுப்போம் என குடியிருப்போர் உறுதிமொழி ஏற்றனர். மரக்கன்று நடப்பட்டது. மூத்த உறுப்பினர் ஆசிரியர் செல்லமணி பாராட்டப்பட்டார்.

நிகழ்வில் பிரியாபாபு விற்கு “சமூகத்தின் முன்மாதிரி தாய் ” விருது யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் தென்னவன், கார்த்திகேயன், ராகேஷ், சிலம்பம் மாஸ்டர் பாண்டி மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பறை இசை, சிலம்பம், வளரி, சுருள், முதலிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பரமேஸ்வரன் நன்றி கூறினார். நிகழ்வில் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *