தமிழ் சேவா சங்கத்தின் மாவட்ட மற்றும் ஒன்றிய அமைப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மண்டல இளைஞர் அணி அமைப்பாளர்
ஜெயவீரபாண்டியன் முன்னிலை வகித்தார்.மயிலாடுதுறை மாவட்ட அமைப்பாளர் எஸ். தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட துணை அமைப்பாளர் தேன்மொழி அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு செயலாளர் இரா.ஆதவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். அப்போது அவர் பேசும்போது தமிழ் சேவா சங்கம் என்ற அமைப்பு, எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி முற்றிலும் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் தமிழர் என்ற உணர்வுடனும் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்துடன் தமிழ் தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் தனித்துவத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஒரு சமூக சேவை அறக்கட்டளை ஆகும் என கூறினார்.

ஆலோசனை கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் சேவா சங்கத்தின் கொள்கைகளுக்கு முரண்பாடாகவும் தமிழ் சேவா சங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்ட தமிழ் சேவா சங்கத்தின் கலாச்சார,பண்பாட்டு பிரிவு மாநில தலைவராக இருந்த பரமகுரு, மற்றும் மண்டல அமைப்பாளராக இருந்த மகாதேவன் ஆகியோரை தமிழ் சேவா சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுகின்றனர். சங்க உறுப்பினர்கள் எந்த ஒரு தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் தமிழ் சேவா சங்கத்தின் மாநில அமைப்பாளர் பாவேந்தன் மாநில சட்ட ஆலோசகர் மணிசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட துணை அமைப்பாளர் விஜயபாலன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *