பாராளுமன்றத் தேர்தல் 2024
உடல்நிலை பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டி மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை……….

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே நியமனம் செய்யப்படுகின்றனர்.

தேர்தல் பணியிலிருந்து தேர்தல் ஆணையத்தால் விலக்களிக்க உறுதியளிக்கப்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாயார், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டோர், மருத்துவ விடுப்பில் உள்ளோர் மற்றும் தேர்தல் பணியாற்ற இயலாத நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என எங்கள் அமைப்பின் சார்பாக கேட்டுக்கொண்டுள்ளனர். .

ஒவ்வொரு தேர்தலிலும் தொகுதி மாற்றி பணி வழங்குவதால் சுமார் 100 கி.மீட்டருக்கு கு அப்பால் பணிக்கு செல்ல வேண்டியுள்ளது. து. மேலும் தேர்தல் ன பணியாணை நடக்கவிருக்கும் முதல் நாள் முதல் நாள் அன்றுதான் வாக்குச்சாவடிக்கான வழங்குவதால் பணியாற்றும் வாக்குச்சாவடியை கண்டறிந்து பணிக்கு பணிக்கு செல்வது மிகவும் சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது.

மேலும் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் பேருந்து வசதியில்லாத குக்கிராமங்களில் உள்ளதால் வாக்குச்சாவடியை அடையாளம் காண்பதும், தேர்தல் பணிக்கு செல்வதும், பணி முடிந்து நள்ளிரவில் வீடு திரும்புவதும் பெரிய சவாலாகவே உள்ளது. குறிப்பாக பெண் ஆசிரியர்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் மிகுந்த சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே தேர்தல் பணியினை அந்தந்த பகுதிகளிலேயே வழங்க வேண்டும் எனவும், மண்டல அலுவலர்கள் மூலம் ஆசிரியர்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு அழைத்து செல்ல உரிய பேருந்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் , மேலும் 100 சதவீத வாக்களிப்பை நிறைவு செய்ய தபால் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்றை னிச்சான்றை முறையாக குறிப்பிட்ட கால கெடுவுக்குள் வழங்க வேண்டும் எனவும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேர்தல் பயிற்சி குறித்த விபரங்களை முன் கூட்டியே தெரிவிக்க வழிவகை செய்ய வேண்டுமெனவும் , வருகிற தேர்தலில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து தேர்தலை எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காத வகையில் நேர்மையாக நடத்துவதற்கு ஆசிரியர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்பதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர்.
பெ.சீனிவாசகன் தெரிவித்துள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *