தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் கோவில்களின் மாநகரமாகும். இங்கு சைவ, வைணவ தலங்கள் ஏராளம் உள்ளன. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் புராதன சிறப்பு மிக்க புண்ணிய தலமாகும்.

இக்கோவில் யானைக்கு மங்களம் என பெயர் சூட்டி உள் ளனர். இந்த யானை கடந்த 1982-ம் ஆண்டு காஞ்சி மகா பெரியவரால் ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு வழங்கப் பட்டது. தற்போது இந்த யானைக்கு 58 வயதாகிறது.

வயது அதிகமாவதை போல யானையின் சுட்டித்தனமும் அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் யானை மங்களத்துக்கு சளி தொந்தரவு உள்ளது. இதனால் யானை தமிழக அரசின் சிறப்பு புத்துணர்வு முகாமிற்கு செல்வதில்லை. சிறப்பு புத்துணர்வு முகாமில் வழங்கப்படும் உணவு, மூலிகை மருந் துகள், உடற்பயிற்சிகள் கோவில் வளாகத்திலேயே யானைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

வெயில் சுட்டெரித்து வருவதால், பாகன் அசோக்குமார் தினந்தோறும் யானை மங்களத்தை பிரத்யேக குளியல் தொட்டிக்கு அழைத்து சென்று குளிக்க வைத்து வருகிறார். யானை மங்களம் குளியல் தொட்டிக்கு அழைத்து வரப்பட்டது.

தொட்டியில் இறங்கிய யானை மங்களம் ஒரு மணிநேரம் ஆனந்த குளியல் போட்டது. துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சி வேடிக்கை பார்த்த பக்தர்கள் மீது இறைத்து ஆனந்தமாக பிளிறியது.

யானையின் குதூகலமான குளியலை பார்த்த கோவிலுக்கு வந்த பக்தர்களும் உற்சாகம் அடைந்தனர். வெளியூர்களில் இருந்து கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் யானை மங்களம் குளிப்பதை வேடிக்கை பார்த்துவிட்டு தங்களுடைய செல்போனில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர். ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானை பிரத்யேக தண்ணீர் தொட்டியில் உற்சாக குளியல் போடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத் ளங்களில் வேகமாக பரவி வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *