விழுப்புரம் மாவட்டம் செ.குன்னத்தூர் அடுத்த எண்ணாயிரம் மலை என்பது தமிழ் சமணர்களின் ஒரு மிகப்பெரும் புண்ணியத்தளமாகும் . சமண மலைகள் பள்ளிகளாகவே கருதப்படுகிறது .

உணவு , உறைவிடம் , கல்வி , மருத்துவம் உள்ளிட்ட தானங்களை அளித்த பள்ளிகளாக இயங்கின . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலம் முதலே வட தமிழகத்தில் செயல்பட்ட சமண பள்ளிகளில் எண்ணாயிரம் அறமலை பள்ளி மிகவும் பிரசித்தி பெற்றது .

17 – 03 – 24 ஞாயிறு அன்று இந்த எண்ணாயிரம் மலை பள்ளியில் சமணம் குறித்த விழிப்புணர்வு விழா மலையடிவாரத்தில் நடைபெற்றது .

மேல்சித்தாமூர் தலைமை சமண மடத்தின் பட்டராகர் , திருமலை அரகந்தகிரி மடத்தின் பட்டாரகர் , இளைய பட்டாரகர் ஆகியோர் தலைமை ஏற்று விழாவை சிறப்பித்தனர் .


கல்வெட்டு அறிஞர்கள் , சமண ஆய்வாளர்கள் , இலக்கிய எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் சமண மலை பள்ளியின் வரலாற்றை எடுத்துரைத்தனர் .

நூற்றுக்கும் மேலான வாகனங்களில் சுமார் 1000 க்கும் கூடுதலானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர் .
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசினர் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவ மாணவியருக்கு இந்த குகை பள்ளியில் ஐந்து வெவ்வேறு இடங்களில் உள்ள கல்வெட்டுகள் ,
சமண துறவியர் உறங்கிய கற்படுக்கைகள் , மருந்து அரைக்க பயன்படுத்திய குழவிகள், அருகத் திருமேனிகள் குறித்து விளக்கப்பட்டது .
நாடாளுமன்ற உறுப்பினர் துரை .ரவிக்குமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார் .பேராசிரியர் ரமேஷ் விளக்கவுரை நிகழ்த்தினார் .
அகிம்சை நடை உள்ளிட்ட பல்வேறு சமண அமைப்புகள் நிகழ்வை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்து இருந்தனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *