பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான கலை நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா..

திரளான மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதிகோயிலில் அமைந்துள்ள செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான கலை மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ-மாணவிகளின் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் இதில் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு விழாவினை கண்டு ரசித்தனர். திரளான மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பல்வேறு விதமான போட்டிகளில் கலந்து கொண்டு அசத்தியது பார்வையாளர்களை கவர்ந்து இருந்தது.