சீர்காழி அருகே வேதராஜபுரத்தில் இரவில் நடைபெற்ற திருவேடுபறி உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என பக்தி முழங்கத்துடன் வழிபாடு செய்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநகரி யில் அமிர்தவல்லி தாயார் உடனாகிய கல்யாண ரெங்கநாதர் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் பெருமாள் தேவியர்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

திருமண தடை உள்ளவர்கள் இக்கோயிலில் பெருமாளுக்கு 32 அடி உயர மாலை சாற்றி வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம் இக்கோயிலில் திருவேடுபறி உற்சவம் கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவில் முக்கிய நிகழ்வாக திருமண கோலத்தில் மணமக்கள் சகிதமாக வரும் பெருமாளிடம் திருமங்கை மன்னன் வழிபறி செய்யும் திருவேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக திருவாலி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருமணம் முடிந்து திருநகரிக்கு அமிர்தவல்லி தயார் உடன் கல்யாண ரங்கநாதன் புறப்பட்டார் வழியில் வேதராஜபுரம் பகுதியில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருமங்கை மன்னன் பெருமாள் இடம் வழிப்பறியில் ஈடுபடுவது போன்றும் அப்போது பெருமாள் திருமங்கை மன்னனுக்கு காட்சியளித்து ஞான உபதேசம் செய்து திருமங்கை ஆழ்வார் அவரித்த ஐதீக நிகழ்வு ஆயிரம் தீப்பந்தங்கள் புடை சூழ நடைபெற்றது.

நள்ளிரவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என பக்தி முழுக்கத்துடன் வழிபாடு செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *