மாநில உரிமைகளை மீட்டெடுக்க இந்தியா கூட்ட ணியை ஆட்சியில் அமர்த்துங்கள் என்றும், பெட்ரோல், கியாஸ். விலை குறைப்பு பிரதமர் மோடியின் நாடகங் களில் முக்கியமானது என்றும் மதுரையில் பிர சாரத்தில் ஈடுபட்ட உதய நிதி ஸ்டாலின் தெரிவித் தார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சு. வெங்கடேசனை, ஆதரித்து தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அதன்படி, மதுரை ஊமச்சிகுளம், கோ.புதூர் பகுதியில் பிரசார வாகனத்தில் நின்ற படி அவர் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.


அப்போது அவர் கூறியதாவது தேர்தலுக்காக மட்டுமே மோடி, தமிழகம் வருகிறார். மற்ற நேரங்களில் அவர் தமிழகம் வருவதற்கு தயங்குகிறார். சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் புயல் மழையால் மக்கள் அவதிப்பட்ட போது பிரதமர் வரவில்லை. அவர்களுக்காக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் வந்தார். மக்களோடு மக்களாக பணி செய்தார். மோடிக்கு பதிலாக, மத்திய நிதி மந்திரியை அனுப்பி வைத்தார்கள்.

அதுபோல், வெள்ள நிவாரண தொகை யாக, ரூ.37 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டும் கொடுக்க வில்லை. கேட்ட உடன் பணம் கொடுப்பதற்கு, நாங்கள் என்ன ஏ.டி.எம்.மிஷனா? என கேட்டனர் அதற்கு நாங்கள் தகுந்த பதிலடி கொடுத் தோம்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு அறிவிக்காத திட்டங்களும் நிறைவேற்றப் பட்டு உள்ளது. மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம். இந்த திட்டத்தில் சுமார் 18 லட்சம் மாணவ, மாணவிகள் தர மான காலை உணவை சாப்பிடுகின்றனர்.

இதனால், குழந்தைகளை காக்கும் அரசாக திராவிடமாடல் அரசு உள்ளது. இது மட்டுமின்றி, கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது இந்த திட்டத்தில் லட் மாணவிகள் பயன்பெறு கின்றனர். நான் முதல்வன் திட்டத்தின் 30 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர்.

ஆட்சிக்கு வந்த பின்பு விலையை இரட்டிப்பாக அதிகரிப்பதுமோடி அரசு, தேர்தலுக்காக நாடகமாடுகிறது. அதாவது, தேர்தல் சமயத்தில் கியாஸ். பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது இந்த நாடகங்களில் முக்கியமானது. தேர்தலுக்கு இன்னும் 25 நாட்கள்தான் உள்ளன.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, நாங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள,
அனைத்து திட்டங்கள் நிறைவேற்றப்படும். எனவே மக்கள் சிந்தித்துப் பார்த்து வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். கடந்தமுறை வெற்றிபெற்ற சு.வெங்கடேசனை, இந்த முறை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். தி.மு சாதனைகளை எடுத்துக்கூறி, 40 தொகுதிகளிலும் தி.மு.க வேட்பாளர்களை வெற்றி அடைய செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பிரசாரத்தில், அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ. கோ.தளபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *