மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு பயிற்சி மற்றும் மருத்துவ முதலுதவி பயிற்சி குறித்து கோயில் பணியாளர்களுக்கு பயிற்சி .

மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் இக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர் கிருஷ்ணன் முன்னிலையில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஆரோக்கியதாஸ் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை பணியாளர்களால், தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு , தீத்தடுப்பு பயிற்சியில் தீயின் வகைகள், அவற்றை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் மற்றும் அவசர ஆபத்து காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தீயின் தன்மைக்கேற்ப தீயணைப்பான்கள், கார்பன்-டை ஆக்ஸைடு , நுரை , பவுடர், ஈர சாக்குகள், தண்ணீர் மற்றும் மணல் கொண்டு தீயணைக்கும் பயிற்சி நிலைய அலுவலரால் எடுத்துரைக்கப்பட்டும், செயல் முறையாக செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது பக்தர்களுக்கு திடீரென ஏற்படும் மூச்சு திணறல், மயக்கம் போன்றவற்றிற்கு எவ்வாறு முதலுதவி செய்து மருத்துவ மனைக்கு அனுப்புவது என்பது பற்றியும் மதுரை அப்பலோ மருத்துவமனை மருத்துவர் விக்னேஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் செயல் முறை விளக்கம் நடத்தி காண்பித்தனர்.

.
இந்நிகழ்ச்சியில் கோயில் அயல்பணி கண்காணிப்பாளர்கள், கோயில் பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அன்னதானப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நன்கு பயிற்சி பெற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *