தி.மு.க தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்க டேசனை ஆதரித்து மாவட்ட தி.மு.க செயலாளர் கோ தளபதி தலைமையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .

வைகை ஆற்றை வணங்கி மலர்கள் தூவி பிரசாரத்தை தொடங்கி சிம்மக்கல் பகுதி (50-வது வார்டு) காசி விஸ்வநாதர் கோவில், தைக்கால் – 1 முதல் 3 வரையிலான தெருக் கள், அக்ரஹாரம், அனுமார் கோவில் படித்துறை, ஒர்க்க்ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, ஆறுமுகச்சந்து. 55-வது வார்டு பூந்தோட்டம், மடம் சந்து – கீழ அண்ணாத் தோப்பு , ராஜாமில் ரோடு, மணிநகரம் மெயின்ரோடு, கிருஷ்ண ராயர்புரம் தெப்பக்குளம், மேலமாசி – வடக்கு மாசி வீதிகள் சந்திப்பு. 51-வது வார்டு வடக்குமாசி வீதி, வடக்கு வெளி வீதி. ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்
சென்ற இடங்களில் எல்லாம் வரவேற்பு அளித்த பொது மக்களுக்கு மத்தியில் வாக்கு சேகரித்து உரையாற்றிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,
எப்போதுமே மதுரை மத்திய தொகுதி தி.மு.க.வின் கோட்டையாக இருந்து வருகிறது வரக்கூடிய தேர்தலிலும் அதனை தொடரும் வகையில் நமது செயல்பாடுகள் அமையும் என்றார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *