மதுரை மாவட்டம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2024ஐ முன்னிட்டு 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, தொடங்கி வைத்தார்.

நாடாளுமன்ற பொதுத் தேர்தல்-2024.ஐ முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் சங்கீதா , 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி ஆட்டோ, அரசு பேருந்துகள், ஏ.டி.எம் மையங்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு பணியினை தொடங்கி வைத்தார்.

இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி மதுரை மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல்மாதம் 19ம்தேதி அன்று நடைபெறவுள்ளதையொட்டி மாவட்ட தேர்தல் அலுவலர் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவின்படி, மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் செல்ஃபி போட்டோ பாயிண்ட், மாரத்தான் போட்டி, கையெழுத்து இயக்கம் என பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கடந்தகால தேர்தல்களின் போது குறைந்த அளவில் தேர்தல் வாக்குகள் பதிவான பகுதிகளில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரித்திடும் நோக்கில் இத்தகைய விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாவட்டஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆட்டோ. அரசு பேருந்து கள் உள்ளிட்ட வாகனங்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு பணி மேற்கொண்டார்.

மேலும், வருகின்ற ஏப்ரல் 19 தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று
பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்திட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர்.மோனிகா ராணா , மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் , இணைப் போக்குவரத்து ஆணையர் சத்தியநாராயணன் , வட்டார போக்குவரத்து அலுவலர்
சித்ரா மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *