திருவொற்றியூர் தேரடி சந்திப்பில் வடசென்னை பா.ஜனதா வேட்பாளர் ஆர்.சி.பால் கனகராஜை ஆதரித்து மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் நடைபெற்றது.

பிரச்சாரக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான கூட்டணி கட்சிக் தொண்டர்கள் உள்பட கொடிகளை கையில் பிடித்துக் கொண்டு பா.ஜனதா கட்சிக்கு வாக்கு சேகரித்தினர்.

முன்னதாக பெண்கள் பூக்கள் தூவி அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரச்சார கூட்டத்தில் அண்ணாமலை பேசியது:-
வடசென்னை நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் பால் கனகராஜ். இவர் வட சென்னைக்கு அற்புதமான ஒரு வேட்பாளர்தி.மு.க. எங்கேயும் வேண்டாம். தி.மு.க. ஆட்சியில் சிங்கார சென்னை என்று சொன்னார்கள். ஆனால் சிங்கிங் சென்னை ஆக தான் உள்ளது.

அவர்கள் தாத்தா காலத்தில் ஆரம்பித்து தற்போது வரை சிங்கிங் ஆகாதே உள்ளது. வட சென்னையில் பாஜனதாவுக்கு ஒரே ஒரு 5 ஆண்டுகள் மட்டும் தாருங்கள். சென்னையில் ஒரு இடத்தில் கூட மழை தண்ணீர் என்பது எங்கேயும் நிக்கவே நிக்காது.
நீங்கள் வாக்கு சேகரிக்க செல்லும் போது மக்கள் உங்களை பார்த்து கேட்பார்கள் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து விட்டீர்கள் என்று கேட்பார்கள். அதற்கு அற்புதமான ஆட்சியைகொடுத்திருக்கிறோம், இந்தியாவில் பொருளாதாரத்தில் உயர்த்திருக்கிறோம் இந்தியாவை 11-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு கொண்டு வந்துள்ளோம் என்று கூற வேண்டும்.

பா.ஜனதா ஆட்சியில் 2019 ஆம் ஆண்டு மீனவ அமைச்சரவை கொண்டு வந்தோம். மந்திரி சபையில் 11 பெண்கள், 12 பேர் பட்டியலினத்தவர்கள்த்தவர்கள், 27 பேர் பிற்பட்ட சமூகத்தினர் உள்ளனர்.

இந்த சரித்திர வாய்ப்பு மறுபடியும் கிடைக்காது. இலங்கையில் சிக்கிய 5 மீனவர்கள் தூக்கு தண்டனையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் என்பதே கிடையாது.

ஆட்சியை மாற்றி வைக்க கூடிய வல்லமை மோடி அவர்களிடம் உள்ளது. அவர் மீண்டும் 3-வது முறையாக பிரதமராக வருவார்.
உங்கள் வாக்கு மோடி ஒருவராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதியில் பால் கனகராஜ் உங்கள் வாக்குகளை கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

இவ்வாறு அவர் பேசினார்.அதே. தி. மு.க வழக்கறிஞர் பிரிவு மாவட்ட பொருளாளர் ஜி. ஆர். ரமேஷ் பிரபு உட்பட மாற்று கட்சியினர் சேர்ந்தனர். மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்கணேஷ், மாவட்ட செயலாளர் பிளாஸ்டிக் குப்பன், துணைத் தலைவர் திருமுருகன்
மாநில துணைச் செயலாளர்பி. கே. செல்வகுமார் உட்பட ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *