காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பச்சூர் நூலாற்றின் குறுக்கே ஜெயம் நகர் செல்வதற்கு பாலம் அமைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 33-இலட்சம் மற்றும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள பூங்காவை மேம்படுத்துவதற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9-இலட்சம் திட்ட மதிப்பீட்டிலான பணிகளை A.M.H. நாஜிம், M LA துவக்கி வைத்தார்கள்
இந்த நிகழ்வில் காரைக்கால் நகராட்சி நிர்வாக பொறியாளர் முத்துசிவம், உதவி பொறியாளர் லோகநாதன், இளநிலை பொறியாளர்கள் சத்தியபாலன், ஜோதிபாஸ் மற்றும் அப்பகுதி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..!