புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தனது கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தியில் கூறியதாவது
ஒருகண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தைக் காட்டு என்று தனது மக்களை வழிநடத்திய இயேசுபிரான் உதயமான கிருஸ்துமஸ் நந்நாளில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.
அவரது அன்பு நெறியைப் பின்பற்றும் உலகின் கோடிக்கணக்கான மக்களில் தங்களையும் இணைத்துக் கொண்டுள்ள புதுச்சேரி மாநில கிருத்துவ மக்கள் இப்பண்டிகை நாளை மகிழ்வோடு கொண்டாடுவதை வரவேற்கிறோம். பிரெஞ்ச்காரர் காலந்தொட்டு கிருஸ்மஸ் விழா என்பது வெறும் கிருத்துவர் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் விழாவாக புதுச்சேரியில் பின்பற்றி வந்திருப்பதை கண்டு பெருமைப் படுகிறோம்.
இந்திய நாட்டின் எழுபத்தைந்தாவது சுதந்திரத்தை நுகரும் இந்த காலகட்டத்தில் இஸ்லாமிய மதத்தினரைத் தொடர்ந்து கிருத்துவ மக்களும் ஒருவித பதட்டத்தில் வாழ்வை நகர்த்துவதை அறிகிறோம்.
அப்படிப்பட்ட மோசமான அரசியல் சூழல் இன்று நம்மைக் கவ்விக் கொண்டுள்ளது. என்னதான் அரசியல் சட்டம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக அமைந்திருந்தாலும் அதனையும் மீறி இந்த பய உணர்வு நம்மை ஆட்கொண்டு வருவதை உணர்கிறோம்.
இப்படிப்பட்ட சூழலில் தி.மு.கழகத் தலைவர் தளபதி அவர்கள் இந்த சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பு அரணாக கழகத்தை வழிநடத்தி வருவது ஆறுதலைத் தருகிறது. வரும் 2026–ல் தமிழ்நாடும், புதுச்சேரியும் தங்களைப் பாதுகாக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறது. நம்மைப் பாதுகாக்க சரியான திசைவழி செல்ல வேண்டும் என்று இந்நாளில் நாம் உறுதி ஏற்போம்.
புதுச்சேரியின் அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து கிருஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடுவோம் என்று மீண்டும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவண்,
இரா. சிவா எம்.எல்.ஏ.,
மாநில திமுக அமைப்பாளர்,
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்,
புதுச்சேரி மாநிலம்.