மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி
நௌசாத்,செய்தியாளர், நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஹனஃபி லப்பை சுன்னத் ஜமாத் பள்ளி கமிட்டி சார்பாக மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில் சாதி மதம் பாரமால் அனைத்து மதத்தினரையும் இஸ்லாமிய புனித மாதமான ரமலான் இப்தார் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு 13 வகையான உணவு வகைக்களுடன் நடைப்பெற்றது.இதில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு அந்த பகுதியின் மத நல்லிணக்கத்தை வெளிக்காட்டியது அனைவருக்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியது.