பொள்ளாச்சி நெகமம் அருகே உள்ள சின்னேரி பாளையத்தில் இயங்கி வரும் சுவஸ்திக் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உலகப் புகழ்பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் சேக்ஸ்பியரின் நினைவை போற்றும் வகையில் ஆங்கில மொழி தின விழா கொண்டாடப்பட்டது
பள்ளியின் தாளாளர் தீபா காந்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆங்கில ஆசிரியர் மோகன்ராஜ் அவர்கள் ஆங்கிலக் கவிஞர்களின் புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்து ஆங்கில மொழி உருவான வரலாறு மற்றும் சேக்ஸ்பியர் உருவாக்கிய ஆங்கில வார்த்தைகளை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தார்.
ஆங்கில எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் கவிதைகள், புகைப்படங்கள், மற்றும் ஓவியங்களை பள்ளி மாணவர்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தினர்.
பள்ளி ஆசிரியர்கள் நீலவேணி மற்றும் வனிதாமணி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தனர் . ஆசிரியர்கள் பலரும் உடன் இருந்தனர்