பாசிங்காபுரம் கிராமத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திண்ணை பிரச்சாரம்

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட பாசிங்காபுரம் பகுதியில் தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளரிடம் கூறியது அவர் எம்ஜிஆர் கட்சியை தொடங்கி இரட்டை இலை சின்னத்தை மக்களிடம் அறிமுகம் செய்து வெற்றி கண்டார் தொடர்ந்து அதே பாதையில் புரட்சித்தலைவி அம்மா இப்போது சேலத்து சிங்கம் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் அனைத்திந்திய அண்ணா திமுக இரட்டை இலை சின்னம் மாபெரும் வெற்றிக்கான உள்ளது

நடைபெறவுள்ள 40 நாடாளுமன்ற தொகுதியிலும் மகத்தான வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார். நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் அதிமுக கொண்டு வந்த திட்டங்களான தாலிக்கு தங்கம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மகளிர்க்கு இருசக்கர வாகனம் அம்மா குடிநீர் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட திட்டங்களை நிறுத்திவிட்டனர்.

பொய் வாக்குறுதிகளை கூறிய முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார் மக்களுக்கு அதை செய்வேன் இதை செய்வேன் என்று வாய்ச்சவடாலாக கூறிவிட்டு இன்று மின்சார கட்டணம் உயர்வு மற்றும் பால் விலை காய்கறி அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாசிய பொருள்களின் விலையையும் ஏற்றி அப்பாவி ஏழை மக்களின் வயிற்றில் அடுத்து பல்லாயிரம் கோடி தானும் தனது சகா அமைச்சர்களும் கொள்ளையடித்து இது போதாது என்று டாஸ்மாக்கிலும் விலையை ஏற்றி குடிமகன்களுக்கும் கரண்ட் சாக்கு கொடுத்த ஆட்சி தான் இந்த திராவிட மாடல் ஆட்சி என்று தெரிவித்தார்

தொடர்ந்து செய்தியாளர்கள் எம்ஜிஆர் முல்லைப் பெரியாறு அணையை தாரை வார்த்து இலங்கைக்கு கொடுத்தார் என்று சீமான் கூறியதாக கேட்டபோது சீமான் போன்றவர்கள் தங்களை மக்கள் மத்தியில் நானும் இருக்கிறேன் என்று தெரிய வேண்டும் என்பதற்காக அடையாளப்படுத்துவதற்கும் மக்கள் மத்தியில் நானும் இருக்கிறேன் என்று தெரிய வேண்டும் என்பதற்காக வரலாற்று இல்லாத விஷயங்களை பேசுவது சீமானுக்கு வாடிக்கையாகிவிட்டது

அதேபோல் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை ஜெயலலிதா குறித்து அவதூறாக தரைக்குறைவாக பேசி அவரது தலைமையின் கீழ் உண்மையான அதிமுக ரத்தம் டிடிவி உடம்பில் ஓடி இருந்தால் அவர் அந்த கட்சியில் கூட்டணி சேர்ந்திருக்க மாட்டார் அதுவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோட்டாவுக்கு கீழே ஓட்டு வாங்கக்கூடிய பிஜேபி கூட எல்லாம் யாராவது கூட்டணி சேர்வார்களா அது தற்கொலை சமம் என்று கூறினார்

இப்போது அவர் உடம்பில் ஓடுவது ரத்தமா வேறு எதுவும் என்று தெரியவில்லை அதேபோல் அவருக்கு மானம் வெட்கம் சூடு சொரணை எதுவும் இல்லாத மனிதரா தற்போது அவர் மாறிவிட்டார்

அதேபோல் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தற்பொழுது அவர்கள் நோட்டாவுக்கு கீழ் ஓட்டு வாங்கக்கூடிய நிலையில் உள்ளதால் பிரதமர் தமிழகத்திற்கு அடிக்கடி வரவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது

பிரதமர் வந்தாலவது மக்கள் மத்தியிலாவது வேட்பாளர்கள் பிரகாசிப்பார்களா என்று ஜூன் 4-ஆம் தேதி தெரியும் என்று தெரிவித்தார்.. இதில் மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் தமிழழகன், வெற்றிவேல், திருப்பதி வாடிப்பட்டி ராஜேஷ் கண்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், கருப்பையா, கலை பிரிவு மாவட்ட செயலாளர் சிவசக்தி, பொதும்பு கூட்டுறவு முன்னால் தலைவர் மலர்க்கண்ணன், துணைத் தலைவர் ராகுல், சமயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதாராதாகிருஷ்ணன், அம்முலோகேஸ்வரன், மற்றும் நிர்வாகிகள் குருசாமி, நெடுங்குளம் தங்கமுருகன், அரிகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *