உறக்கத்தில் நெடுஞ்சாலைத்துறை.?.சாலையோர பள்ளம் பாலங்களில் பராமரிப்பின்றி மணல் குவியல் போன்றவைகளால் விபத்து ஏற்படும் அபாயம்.

சோழவந்தான்

சோழவந்தான் அதன் சுற்று வட்டார கிராமம் மற்றும் சிறு நகரம் உள்ளிட்டவைகள் வழியாக செல்லும் தார் சாலைகள் பாலங்களை வாடிப்பட்டி நெடுஞ்சாலை கோட்ட பராமரிப்பில் உள்ளது

இதில் போக்குவரத்துபயன்பாட்டில் உள்ள முக்கிய சாலைகளில் ஓரங்களில் பராமரிப்பின்றி பள்ளங்கள் மற்றும் பாலத்தில் மணல் குவியலால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிழப்பு ஏற்பட்டு வருகின்றது என வாகனோட்டிகளும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி உப கோட்டம் நெடுஞ்சாலை மற்றும் காட்டுமான பராமரிப்பு பிரிவு துறையின் கீழ் சோழவந்தான் மற்றும் அதன் சுற்று பகுதி கிராமங்களில் வழியாக செல்லும் தார்சாலைகள் பராமக்கப்பட்டு வருகின்றது

இந் நிலையில்சோழவந்தானிலிருந்தது வாடிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் சாலையின் குறுக்கே செல்லும் பாசன வாய்காலில் அரிப்பு ஏற்பட்டு 10.அடிக்கு அபாய பள்ளம் உருவாகி உள்ளது.

இதனால் அவ்வழியே இரவு நேரங்களில் செல்லும் டூவிலர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் மற்றும் உயிழப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றது.

இதே போல் மேலக்கால் வைகையாற்றின் குறுக்கே சுமார் 50.ஆண்டூகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்தில் மேல் பகுதி ஓரங்களில் மணல் குவியல் குவிந்து உள்ளது. இதனால் பாலத்தின் மேல் செல்லும் வாகனோட்டிகள் சறுக்கி விழந்து விபத்துக்குள்ளாகும். அபாய சூழலும் மழை காலங்களில் மழை நீர் வடிந்தோட. வழியின்றி பாலத்தின் மேல் தேங்கி நின்ற அவல சூழல் நிலவி வருகின்றது.

சாலை மற்றும் பாலங்களை மாதாந்திர பராமரிப்பு வருடாந்திர பராமரிப்பு செய்வதற்கு சாலை பணியாளர்கள் இருந்தும் செயல்பாடின்றி. வடிப்பட்டி உபகோட்ட நெடுஞ்சாலை துறை ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக இப் பகுதி வாகனோட்டிகளும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வைத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *