தமிழகத்தில் அதிமுக- திமுக இடையே தான் போட்டி’- எடப்பாடி பழனிசாமி பேச்சு

பாஜகவைப் பார்த்து பயப்படும் முதலமைச்சர் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி தாக்கு
பாஜகவை பார்த்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.

பாஜகவைப் பார்த்து பயப்படும் முதலமைச்சர் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி தாக்கு
நாமக்கல்லில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் ராகா தமிழ்மணியை ஆதரித்து பேசினார். அருகில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், சரோஜா ஆகியோர்.

நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நாமக்கலில் பொம்முக்குட்டை மேட்டில் நடைபெற்றது. குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட செயலாளருமான தங்கமணி தலைமை வகித்தார். முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் கலந்துகொண்டு, நாமக்கல் லோக்சபா தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஹா தமிழ்மணியை ஆதரித்துபேசியதாவது:

நாமக்கல் மாவட்டம், பல தொழில்கள் நிறைந்த மாவட்டம். தற்போது விடியா தி.மு.க., அரசு மற்றும் மத்திய பாஜ அரசால் தொழில்கள் நலிவடைந்து, வேலையில்லா சூழ்நிலை இந்த மாவட்டத்தில் நிலவுகிறது.

இந்த மாவட்டத்தில், லாரி தொழிலை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். தற்போது அனைவரும் சிரமப்படுகின்றனர். இந்த ஆட்சியில் மக்களுக்கு என்ன கிடைத்தது. அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகத்திலேயே அதிக அளவிலான திட்டங்கள் நாமக்கல் மாவட்டத்திற்கு கிடைத்தது.

தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதில், சுங்க சாவடிகளை மூடுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சுங்க சாவடிகளை கொண்டு வந்தது, மத்தியில், பா.ஜ., அரசு இருக்கின்றபோது, தி.மு.க., சேர்ந்த டி.ஆர்.பாலு, தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

அதனால், லாரி உரிமையாளர் மாதம் ரூ. 8,000 முதல் 10 ஆயிரம் வரை சுங்க கட்டணம் செலுத்துகின்றனர். தற்போது, தேர்தல் அறிக்கையில், சுங்க சாவடிகள் மூடப்படும் என அறிவித்துள்ளனர்.

கொண்டுவந்தது பா.ஜ., அதில் அங்கம் வகித்தது தி.மு.க., தற்போது மூடுவோம் என சொல்வது தி.மு.க. இரட்டை வேடம் போடும் கட்சி என்பøது நிரூபணமாகி உள்ளது,.

அதேபோல் நீட் தேர்வு. 2010ல் மத்தியில் காங்., ஆட்சி. அப்போது, இங்கிருக்கிற தி.மு.க. எம்.பி., காந்திசெல்வன் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தார். 2010, டிச., 21ல், மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா கெஜட்டில் நோட்டிபிகேசன் போட்டாங்க. அப்போதுதான் நீட் தேர்வு வந்தது. கொண்டு வந்ததும் அவர்கள், இன்றைக்கு ரத்து செய்ய வேண்டும் என்று மக்களை ஏமாற்றி நாடகம் நடிப்பதும் தி.மு.க கட்சி. தி.மு.க., தலைவர். 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என, ஸ்டாலின் பேசினார். 3 ஆண்டு முடிந்துவிட்டது. இன்னும் செய்யவில்லை. அமைச்சர் உதயநிதி, இந்த நீட் தேர்வை ரத்து செய்வதற்கு எங்களிடம் ரகசியம் இருக்கிறது என்றார். அந்த ரகசியத்தை இதுவரை வெளியிடவில்லை.

அரசு பள்ளியில் படிக்கின்ற ஏழை மாணவர்கள், அடிமட்டத்தில் பிறந்த மாணவ, மாணவியர் அவர்களும், எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவராக வேண்டும் என்பதற்காக, அ,தி.மு.க., அரசு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடுகொண்டு வந்து அமல்படுத்தப்பட்டு, இன்றைய தினம், 2,160 அரசு பள்ளி மாணவ மாணவியர் எம்.பி.பி.எஸ்., படிக்கின்றனர். திமுக ஆட்சியில் எல்லா துறையிலும் ஊழல். ஊழல் இல்லாத துறையே கிடையாது. லஞ்சம் இல்லாத துறையே கிடையாது. இன்னும், 24 மாதம்தான் இருக்கிறது ஆட்சி மாற்றத்துக்கு, மக்கள் தயாராகிவிட்டனர்.

தமிழகத்தில், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், டாக்டர்கள், நர்சுகள் என எல்லாரும் போராட்டம் நடத்தும் சூழ்நிலையை விடியா தி.மு.க. ஆட்சியில் பார்க்கிறோம். இதில் முதல்வர் ஸ்டாலின், நீங்கள் நலமா என கேட்கிறார். இவ்வளவு பிரச்னை இருக்கும்போது யார் நலமாக இருக்க முடியும்.

பழனிசாமி பா.ஜ.வை பார்த்து பயப்படுவதாகவும், கள்ள உறவு வைத்து இருப்பதாகவும் ஸ்டாலின் கூறுகிறார். கள்ளத்தொடர்பு வைப்பவர்கள் திமுகவினர்தான். நாங்கள் கள்ளத்தொடர்பு வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. தமிழக மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய திட்டங்களை எதிர்த்து போராடி வெல்வோம். அந்த திராணி எங்களிடம் உள்ளது. உண்மையில் நீங்கள் தான் மத்திய அரசை பார்த்து பயப்படுகிறீர்கள். எதிர்கட்சியாக இருந்தபோது கோ பேக் மோடி என்றவர்கள். ஆட்சிக்கு வந்த பின் வெல்கம் மோடி என்கிறார்கள். பிரதமரைப் பார்த்து பயந்துபோய், அவரது காலில் சரணாகதியடைந்து செஸ் போட்டியை தொடங்கி வைக்க, உதயநிதி ஸ்டாலின் மோடியை அழைத்து வந்தார். இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சார பொதுக்கூட்டத்தில்
முன்னாள் அமைச்சர்கள் சரோஜா, கரூர் விஜயபாஸ்கர், ப.வேலூர் எம்எல்ஏ சேகர், முன்னாள் எம்எல்ஏக்கள் பாஸ்கர், பொன் சரஸ்வதி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் காந்திமுருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *