வாடிப்பட்டி

வாடிப்பட்டி அருகே சுடுகாடு வசதி வேண்டி வாக்கு சேகரிக்க வந்த காங்கிரஸ் தலைவரிடம்விவசாயக் கூலி தொழிலாளர் பெண் கோரிக்கை வைத்தார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பிரிவில் தேனி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு இ காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை வாக்கு சேகரித்தார்.

அப்போது அந்த பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்த கூலித் தொழிலாளி செம்பு படி பட்டியைச் சேர்ந்த கருப்பாயி (வயது 45) தங்கள் பகுதியில் சுடுகாடு வசதி இல்லை என்றும், 875 ஓட்டுகள் உ|ள்ளசெம்புகுடிபட்டிக்கு தற்போது வரை தனியாக வாக்குச்சாவடி அமைக்கப்படவில்லை அதனால் இரண்டு கிலோமீட்டர் அருகில் உள்ள அய்யன கவுண்டம்பட்டிக்கு நடந்து சென்று வாக்களிக்க வேண்டிய நிலை உள்ளது.எனவே ” எங்கள் ஊரின் முக்கிய பிரச்சனை யான இந்த இரண்டு பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு உடனே காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கலெக்டரிடம் தெரிவித்து இந்த பிரச்சனைக ளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்து தங்க தமிழ்செல்வனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *