மதுரை நாடாளுமன்ற தொகுதியில்
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போட்டனர் வாக்களிக்க நாளை கடைசி நாள்

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகு தியில் முதியவர்கள், மாற் றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போட்டனர். நாளை (திங்கட்கிழமை) தபால் வாக்களிக்க கடைசி நாளாகும்.


தபால் ஓட்டு தொடங்கியது நாடாளுமன்ற பொதுத்
தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் 85 வய திற்கு மேற்பட்ட முதியவர் கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப்பதிவு செய்ய விருப்பமுள்ளவர்களிடம் விண்ணப்பம் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கியது.

அதன் படி மதுரை மாவட்டத்தில்
85 வயதிற்கு மேல் 22,326வாக் காளர்களும், 12,360 மாற்றுத்தி றன் வாக்காளர்களும் உள்ள னர்.
இவர்கள் தபால் வாக்கு பதிவு செய்ய ஏதுவாக சம்பந் தப்பட்ட உதவி தேர்தல் நடத் தும் அலுவலர்கள் மூலம் 12டி படிவம் வழங்கப்பட்டது.

அவற்றில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் 875 முதி யோர்களும், 324 மாற்றுத்திற னாளிகளும் என 1,199 பேர் தபால் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்து படிவங் களை பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர்.

அந்த வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்வதற் அந்த காக மதுரை நாடாளுமன்ற மாக தொகுதிக்கு உட்பட்டசேட்ட பதிவு மன்ற தொகுதிகளிலும் ஒரு மண்டல அலுவலர், ஒரு தேர்தல் நுண்பார்வையாளர், அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி, ஒரு வீடியோ ஒளிப்பதிவாளர், துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் அடங்கிய 25 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தபால் ஓட்டு போடும் பணி நேற்று தொடங்கியது.

மதுரை நாடாளு மன்றதொகுதிக்கு உட்பட்ட ஊமச்சிகுளம், திருப்பாலை, ஆத்திகுளம், அய்யர்பங்களா உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்திருந்த வாக்காளர் களை வீடு, வீடாக தேடி சென்று தேர்தல் நன்ன டத்தை விதிகளை பின்பற்றி குழுவினர் மறைமுக தபால் வாக்குகளை செய்ய வைத்தனர்.

மேலும் குழுவினர் வருகை | குறித்து வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு அலைபேசி மூலம் முன்னதாகவே தகவல் அளிக்கப்பட்டது.

தனை மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான சங்கீதா நேரில் சென்று முதியவர்கள் வாக்களிப்பதை ஆய்வு செய்தார்.
இந்த தபால் வாக்குப்பதிவு
நேற்று தொடங்கி நாளை (திங்கட்கிழமை) வரை நடக்கிறது, மதுரை நாடாளுமன்ற தொகுதியில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி களை தேடி வாக்களிக்கசெய் யும் தபால் வாக்குப்பதிவு முறை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அவர்கள் ஜனநா யக கடமையை நிறைவேற்றியதாக மன நிறைவு பெற்ற தாக தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *