தஞ்சாவூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண்களப்பணியின் ஒரு பகுதியாக வலங்கைமான் வேளாண் உதவி இயக்குனருடன் கலந்துரையாடினர்.

தஞ்சாவூர் டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், இறுதியாண்டு மாணவிகள் ஊரக வேளாண் களப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக வலங்கைமான் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று வேளாண் உதவி இயக்குனர் சூரியமூர்த்தி ( பொ) இடம் அங்குள்ள பயிர் வகைகள், வேளாண்மைக்கு உட்பட்ட நிலப்பரப்பு, விளைச்சல் விவரங்கள், நீர் பாசன வசதி குறித்து கேட்டறிந்தனர்.

மேலும் வேளா உதவி இயக்குனர் அலுவலகத்தின் நிறுவன அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள்குறித்தும் மாணவிகள் கலந்து உரையாடினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *