தஞ்சை மாவட்டத்திற்குள் இதுவரை சிறுத்தை நுழைந்ததற்கான எந்தவித தடயங்களும் கண்டறியப்படவில்லை எனவும் வதந்திகளை பரப்பி பொதுமக்களை அச்சுறுத்த வேண்டாம் என தஞ்சை வனச்சரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டாம் தேதி நகர் பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை கடந்த ஏழு நாட்களாக வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.

தற்போது அந்த சிறுத்தை மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து தஞ்சை மாவட்ட எல்லையான கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டை பகுதியில் இடம்பெயர்ந்துள்ளதாக தகவல் வெளியானது.

மயிலாடுதுறை மாவட்டம் காஞ்சி வயல் பகுதியில் சிறுத்தை நடந்து சென்றதற்கான கால் தடம் நேற்று இரவு கண்டறியப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இருந்து காஞ்சி வயல் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மயிலாடுதுறை வனத்துறையினருடன் இணைந்து தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வனத்துறை அலுவலர்கள் 15 பேர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் தஞ்சாவூர் மயிலாடுதுறை எல்லையில் 25 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது வரை சிறுத்தை தஞ்சை மாவட்டத்திற்குள் நுழைந்ததற்கான எந்தவித தடயங்களும் கண்டறியப்படவில்லையெனவும் எனவே வதந்திகளை பரப்பி பொதுமக்களை அச்சுறுத்த வேண்டாம் என தஞ்சை மாவட்ட வனச்சரக அதிகாரி பொன்னுசாமி கேட்டு கொண்டுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *