வாடிப்பட்டியில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுடன் கலந்துரையாடல்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் உள்ள கிராம புறங்களில் விவசாயிகளுடன் வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்து மதுரை ஒத்தகடை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை படிக்கும் இறுதியாண்டு மாணவிகளான
கிரிஷ்மா , அனந்தா பல்லவி, இ. டீனா ஜெனிபர், மா. தேவிகா, டோ.டாரத்தி ஜெஸிகா லாய்ஸ், காதா. எஸ். கிரீஷ், ஏ. கோமதி மற்றும் க. ஹரி பிரியதர்ஷினி ஆகியோர் தங்களின் கிராமப்புற வேளாண்மைப்பணி அனுபவத்திட்டத்தின் கீழ் நேற்று வாடிப்பட்டி அருகே டி. ஆண்டிப்பட்டியில் அமைந்துள்ள தென்னையில் முன்னோடி விவசாயியான வெங்கடசாமி, என்பவரின் தென்னைத்தோட்டத்திற்குச் சென்று, பார்வையிட்டு விவசாயிகள் பின்பற்றும் தொழில்நுட்ப அனுபவங்களான “தென்னைக்கு நுண்ணூட்டச்சத்து அளித்தல் நேரடியாகவும், பாசனவழி உரமிடல் வாயிலாகவும் மற்றும் தென்னை பராமரிப்பு ” குறித்தும் கேட்டறிந்தனர் இதன்பின்பு தென்னை விவசாயிகளுடன் வேளாண் மாணவிகள் தென்னை சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றி கலந்து ரையாடினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *