நாகை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எஸ் ஜி எம் ரமேஷ் அவர்களை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்தல் பரப்புரை .
நாகை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எஸ் ஜி எம் ரமேஷ் அவர்களை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கரன் கூட்டத்துக்கு தலைமை வகித்தார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.காமராஜ் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் தினகரன் மற்றும் கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை நாகை மக்களவைத் தொகுதி தேர்தல் குழு பொறுப்பாளர் புரட்சி கவிதாசன் தொகுத்து வழங்கினார் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் பங்கேற்று பேசியதாவது

தமிழ்நாடு செழுமையான கலாச்சாரம் கொண்டது இந்தியாவின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு திறன்களை வலுப்படுத்துவதில் முன்மாதிரியான பங்களிப்பை தந்த சோழர்களின் மண்ணில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன் உலகின் பழமையான மற்றும் அழகான மொழி தமிழ் மொழி இந்திய மொழிகளுக்கெல்லாம் மூத்த சகோதரியா ஆனது தமிழ் மொழி தெய்வப்புலவர் திருவள்ளுவர் பிறந்த தமிழ்நாட்டில் நான் நின்று கொண்டிருப்பது பெருமையாக உள்ளது

பாராளுமன்றத்தில் செங்கோலை வைப்பதற்கு முன்னர் நாடு முழுவதும் இந்த வார்த்தையை யாரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை பிரதமர் மோடி நாடாளுமன்ற கட்டிடத்தில் நீதி மற்றும் சுதந்திரத்தின் சின்னமான செங்கோலை முருகேசன் மூலம் ஒவ்வொரு குடிமகனும் செங்கோலை அறிந்து வைத்துள்ளார்கள் அதன் மூலம் புதிய சகாப்தத்தின் தொடக்க உருவாகியுள்ளது இதுபோன்று பல பணிகளை பிரதமர் மோடி செய்துள்ளார் காசியிலும் சௌராஷ்டிராவிலும் தமிழ் சங்க நிகழ்ச்சியை நடத்தினார் பாரதி பிறந்த டிசம்பர் 11ஆம் தேதியை தேசிய மொழி தினமாக அறிவித்துள்ளார் 75 ஆண்டுகளில் இந்தியா அதிக முன்னேற்றங்களை கண்டுள்ளது குறிப்பாக பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன இன்று இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இருப்பதை தவிர பொருளாதாரம் வேகமாக வளரும் நாடாகவும் மாறி உள்ளது. குறிப்பாக 2014 ஆம் ஆண்டுக்குப் முன்பு மொபைல் போன்களை இறக்குமதி செய்யும் நாடாக இருந்த நிலையில், தற்போது 92 சதவீத மொபைல் போன்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடாகவும் உயர்ந்துள்ளது சிறிய அளவிலான பாதுகாப்பு பொருள்களை கூட வெளியில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலையை மாற்றி ஐஎன்எஸ் விக்ராந்த் போன்ற விமானம் தாங்கி போர்க்க பல்கலை இந்தியாவிலேயே தயாரிக்கும் நிலையை உருவாக்கியதோடு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதியும் செய்து வருகிறோம் மோடி ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பு 600 கோடியாக இருந்த பாதுகாப்பு தளவாடப் பொருட்களின் ஏற்றுமதி இன்று 26 ஆயிரம் கோடியை எட்டி உள்ளது அதுபோல் 5ஜி மொபைல் இணைப்பில் இந்தியா முன்னணியில் உள்ளது மேலும் இந்தியா 6 ஜிக்கு தயாராகி வருகிறது. உலகிலேயே மிக மலிவான மொபைல் டேட்டா சேவை இந்தியாவில் தான் கிடைக்கிறது இதற்கு பிரதமர் மோடியின் நுட்பமான ஆட்சித் திறனை காரணம். இத்தகைய திறன் காரணமாக இந்தியாவின் சாமானிய குடிமகன் கூட சிறிய பண பரிவர்த்தனைகளை டிஜிட்டல் பண பரித்தணைகளாக செய்து பயனடைந்து வருகிறார்கள்
பாஜக அரசை பொருத்தவரை 100 பைசா பொதுமக்களை செல்ல வேண்டும் என்றால் முழுமையாக அந்த பைசா முழுமையும் சென்றடைகிறது ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் 14 பைசா அரசியல்வாதிகளுக்கும் 6 பைசா ஊழல்வாதிகளுக்கும் சென்றது 2014க்கு முன்னர் நாள் ஒன்றுக்கு பத்து முதல் 12 கிலோமீட்டர் மட்டுமே சாலை அமைக்கப்பட்டு வந்தது ஆனால் மோடி ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 37 முதல் 40 கிலோமீட்டர் நீளம் வரை சாலை அமைக்கப்படுகிறது 99 கிராமப்புற சாலைகள் நடைபாதை சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் மூன்றரை லட்சம் கிலோமீட்டர் கிராமப்புற சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் 74 விமான நிலையங்கள் மட்டுமே கட்டப்பட்டிருந்தன ஆனால் மோடி ஆட்சியில் 148 விமான நிலையங்களாக இது உயர்ந்துள்ளது. அதுபோல் எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஏழு மட்டுமே கட்டப்பட்டிருந்தன தற்போது 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் நாட்டின் வளர்ச்சியை மையமாகக் கொண்டுதான் செயல்பட்டோமே தவிர, எங்களது கட்சியை வளர்க்கவோ அரசியல் செய்யவோ இல்லை நாட்டிலேயே தமிழகத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் மட்டுமே இரண்டு பாதுகாப்பு வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன இதிலிருந்தே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் எங்களது கட்சிக்கு தமிழகத்தில் அவ்வளவாக வலு இல்லை இருந்தபோதிலும் இத்தகைய பாதுகாப்பு வழித்தடத்தை தமிழக மக்கள் மீது உள்ள அன்பின் காரணமாக உருவாக்கினோம் இதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை மட்டுமே மையமாக கொண்டு செயல்படுகிறோம் என்பதை உணர வேண்டும் மோடி அரசில் இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்கின்ற நோக்கத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க காரணமாக இருந்துள்ளார் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைந்த முன்னேற்றம் ஆகியவற்றை கொண்டுவர பிரதமர் மோடி காட்டிய அர்ப்பணிப்பு போல் ஏழு தசாப்தங்களிலே எந்த பிரதமராலும் அந்த அர்ப்பணிப்பு உணர்வு காட்டப்படவில்லை என்பது உண்மை அத்தகைய மோடி குறித்து அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். சேற்றை வாரி இறைக்கிறார்கள் எவ்வளவு சேற்றை வாரி இறைக்கிறார்களோ அதே அளவுக்கு தாமரை மலரும் என்பதில் சந்தேகம் இல்லை

தேசிய ஜனநாயக கூட்டணியை தாக்கி பேசுவதாக கருதி இண்டியா கூட்டணியினர் இந்து மதத்தை அவமதிக்க தொடங்கியுள்ளனர். இந்து மதம் எந்த சக்தியின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதோ அதனை அளிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் தமிழகத்தில் கோட்டை மாரியம்மன் மகா மாரியம்மன் மதுரை மீனாட்சி காஞ்சி காமாட்சி என சக்தியின் வடிவங்கள் உள்ளன. சக்தி என்றால் தாய் சக்தி என்று பொருள் அத்தகைய தாய் சக்தியாக உள்ள பெண்களையும் அவமதிக்கிறார்கள்.

தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினும் இந்து மதத்தை அவமதித்துள்ளார் சனாதன தர்மம் என்பது டெங்கு மலேரியா போன்ற கொசுக்களால் வரவும் என்றும் அவை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார் இப்படிப்பட்ட வெட்கக்கேடான விமர்சனங்களுக்கு திமுகவை மன்னிக்க வேண்டுமா அதுபோல் செங்கோலை புதிய நாடாளுமன்றத்தில் நிறுவுவதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இங்குள்ள மடங்களுடன் செங்கோல் தொடர்புடையது என்பதால் மடங்களையும் எதிர்கட்சியினர் விமர்சித்தனர் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை நாடாளுமன்றத்திலும். அதனால்தான் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருகின்றன இதற்கெல்லாம் பெண்கள் வருகின்ற மக்களவைத் தேர்தலில் பதில் சொல்ல வேண்டும்
தமிழகம் என்றாலே எனக்கு
மறைந்த ஜெயலலிதா நினைவுக்கு வருகிறார் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார் அதைப்போல பெருந்தலைவர் காமராஜர் மற்றும் டாக்டர் எம்ஜிஆர் போன்ற தலைவர்களையும் இந்த. தமிழகம் வழங்கியுள்ளது இத்தகைய தலைவர்களால் பிரதமர் மோடி ஈர்க்கப்பட்டு இருக்கிறார் அதனால்தான் நலிந்த பிரிவினருக்கு அதிகாரம் படிக்க வேண்டும் என்பதற்காக பாடுபட்டு வருகிறார்

தமிழகத்தில் லட்சக்கணக்கான மீனவர்கள் வாழ்கின்றனர் இலங்கையால் மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள் இன்னுயிரையும் இழந்தார்கள் இந்த சூழலில் தான் தனது ராஜதந்திர உறவை பயன்படுத்தி மீனவர் நலம் தேடும் அரசாக மோடி ஆட்சி நடத்தி வருகிறார் இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த அநீதிக்கும் கச்சத்தீவு இழப்புக்கும் மீனவர் சமூகத்தில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சனைகளுக்கும் இந்தியா காங்கிரஸ் கூட்டணி தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் காங்கிரசும் திமுகவும் சேர்ந்து தான் இலங்கைக்கு பரிசாக கச்சத்தீவை கொடுத்தது இந்த நிலையில் எந்த வாயை வைத்துக்கொண்டு தமிழர் உரிமை பற்றி மீனவர் உரிமை பற்றி இவர்கள் பேசுகிறார்கள் போராடுகிறார்கள் என்று புரியவில்லை தேர்தல் தொடங்கும் முன்பே இண்டியா கூட்டணி கட்சியினர் அடித்துக் கொள்ளத் தொடங்கி விட்டனர் எனவே தங்களது வாக்குகளை தயவுசெய்து வீணாக்காதீர்கள் அமைதிக்கு வாக்களியுங்கள் மோடிக்கு வாக்களியுங்கள் எங்களுடைய நோக்கம் தேசம் தான் முதன்மையானது என்பதாகும் ஆனால் எதிர்க்கட்சியினர் உடைய நோக்கம் குடும்பமே முதன்மையானதாக உள்ளது இதனை உணர்ந்து பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *