காட்டுமன்னார்கோயில் அருகே வானமாதேவி கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் தேர்தல் புறகணிப்பு செய்த்தால்
பரபரப்பு காணப்பட்டு வருகிறது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் வானமாதேவி கிராமத்தில் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் செல்வராஜ் இவர் குடியிருக்கும் தெருவில் ஆட்சியரிடம் யூடியர் பட்டா வாங்கி பொதுசாலையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து தற்பொழுது மனை பிரிவாக மாற்றி வருகிறார் அரசு ஆவணங்களை மாற்றி அதற்கு அளவீடு செய்து அத்துக்கள் போட்டு உள்ளார்

அதனை கண்டித்து கிராம பொதுமக்கள் இந்தப் பகுதி செல்வராஜ் என்பவர் தலைமையில்
கடந்த பல வருடங்களாக காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலகம் காவல்துறையிடம் மனு கொடுத்தும் கடந்த பத்தாண்டுக்கு மேலாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

ஆத்திரமடைந்த பொதுமக்கள் நடைபெறுகின்ற லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் வாக்களிக்க மாட்டோம் எனக் கூறி தெருக்களில் கருப்புக்கொடி கட்டி பாதைகள் ஏந்தி செல்வராஜ் தலைமையில் அப்பகுதிமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் செல்வராஜ் தெரிவிக்கையில் எங்கள் பகுதியில்

அரசு இலவசமாக வழங்கப்பட்ட வீட்டுமனை நிலங்களில் ப்ளூ பிரிண்ட் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மூலம் மறு நில அளவை செய்து அத்து காண்பிக்கபட வேண்டும்

வீட்டுமனை ஆக்கிரமிப்புகளை மீட்டு வீடு மனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்

எங்கள் பகுதி மயானத்திற்கு சாலையை அரசு ஆவண பதிவிடைகளில் ஏற்றி பொது வழி பாதையாக பதியப்பட வேண்டும்

பட்டாணி குளத்திற்கு பொது வழி சாலை அமைத்து அரசு ஆவண பதிவேடுகளில் பொது வழி சாலையாக பதியப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செய்து வருகிறோம் என தெரிவித்தார் இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டு வருகிறது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *