ஆ.மோகன்ராஜ்,செய்தியாளர் காரைக்கால் மாவட்டம்

என்னுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டதால் தமிழக முதல்வருக்கு இடையூறு ஏற்படுவதாக புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் காரைக்காலில் பேட்டி.

நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் நமச்சிவாயம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியுடன் பிரச்சாரம் செய்து வருகிறார்

இந்நிலையில் காரைக்கால் மாவட்ட இந்திய ஜனநாயக கூட்டணி கட்சித் தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமையேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்

இதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ” மத்தியிலும் மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய ஆட்சி இருந்தால் மாநிலத்தின் வளர்ச்சி சீராக இருக்கும் எனவும் எனவே மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுவதால் மக்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரித்தால் பல்வேறு நலத்திட்டங்கள் மாநிலத்திற்கு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

தாம் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் அனுபவம் பெற்று இருப்பதால் தன்னை தேர்வு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பினால் காரைக்கால் மாவட்டம் மற்றும் ஒட்டுமொத்த புதுச்சேரி வளர்ச்சிக்கும் மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பேன் எனவும், நல்ல திட்டங்களை மாநிலத்திற்கு கொண்டுவரும் பாராளுமன்ற உறுப்பினராகவும் மத்திய அரசுக்கு அனுப்பி நிலுவையில் உள்ள கோப்புகளை ஒப்புதல் பெற்று புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் எனவும் புதுச்சேரி மாநிலத்தில் இலவச அரிசி வழங்குவதற்கு தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த பின்னர் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வைத்திலிங்கம் ஐந்தாண்டுகளில் எந்த ஒரு திட்டத்தையும் புதுச்சேரிக்கு கொண்டு வரவில்லை எனவே அவரை மீண்டும் வெற்றி பெற வைப்பதில் எந்த பயனும் இல்லை எனவும் தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் வயதில் மூத்தவர் எனவும் அவர் என்னை விமர்சிப்பது நான் இதற்கு கருத்து தெரிவிக்கவில்லை என தெரிவித்த அவர் என்னை விமர்சிப்பதால் நான் அந்த அளவிற்கு வளர்ந்திருப்பதாக கருதுகிறேன் எனவும் தெரிவித்தார். உறுதி செய்யப்பட்ட என்னுடைய வெற்றி அவர்களை இடையூறு செய்வதாகவும் தெரிவித்தவர்

இதுபோல விமர்சனம் செய்யும் முதலமைச்சர் ஏன் செந்தில் பாலாஜியை மற்றொரு கட்சியில் இருந்து திமுகவில் இணைத்தார் எனவும் அவருக்கு ஏன் அமைச்சர் பதவி கொடுத்தார் எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *