ஆர்.தீனதயாளன் செய்தியாளர்
பாபநாசம்

பாபநாசம் பகுதிகளில், ஒற்றை வாகனத்தில் ஆரவாரம் இன்றி, தன்னம்பிக்கையுடன் வாக்கு சேகரித்து வரும்..

சாமானிய மக்கள் நலக் கட்சியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி வேட்பாளர்..

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே இருந்து வரும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் , பாபநாசம் பகுதியில் சாமானிய மக்கள் நலக் கட்சியின் சார்பில் மயிலாடுதுறையில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் கார்த்திக் ஒற்றை வாகனத்தில், எந்தவித ஆரவாரம் இல்லாமல், தன்னம்பிக்கையுடன் வீடுகள் தோறும் சென்று துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். இதை பொதுமக்களும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

தொடர்ந்து பேசிய சாமானிய மக்கள் நலக் கட்சியின் மயிலாடுதுறை வேட்பாளர் கார்த்திக், மயிலாடுதுறை பகுதி கிராமங்களில் பஸ்வசதி, மின்சாரவசதி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து வைக்கப்படும் எனவும், தேர்தல் பரப்புரைக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனத்திற்கு தேவையான ஆவணங்கள் எடுப்பதற்கு, வேட்பாளருக்கே பல்வேறு சிரமங்கள் இருந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *