வலங்கைமானில் பெரிய பள்ளிவாசல், சேனியர் தெரு பள்ளிவாசல் ஆகிய இரண்டு இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பு.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பெரிய பள்ளிவாசல், சேனியர் தெரு பள்ளிவாசல் ஆகிய இரண்டு இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியின் சார்பில், நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வை செல்வராஜ் அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக் கொண்டனர்.
நிகழ்வில் திமுக நகர செயலாளர் பா.சிவனேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித் தமிழ்மாறன், வார்டு செயலாளரும், பேரூராட்சி மன்ற உறுப்பினருமான க. செல்வம், பொருளாளர் புருஷோத்தமன் உள்பட திமுக கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆகியோர் இரண்டு பள்ளிவாசல்களுக்கும் சென்று ஜமாத்தார்களை சந்தித்தும், உடன்பிறவா சகோதரர்களை சந்தித்தும், தோழமை கட்சி வேட்பாளருக்கு கதிர் அருவாள் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இரண்டு பள்ளிவாசல்களிலும் நிர்வாகிகள் மற்றும் சகோதரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.