கீரனூரில் நெல் களத்தை மீட்டு தர வேண்டி கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கீரனூர் பகுதியில் விவசாயிகள் நெல் அறுவடை செய்து களத்தில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கீரனூர் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் நெல் களம் அமைந்துள்ளதால் இதனை அபகரிக்கும் நோக்கில் கீரனூரில் உள்ள கண்டியம்மன் கோயில் நிர்வாகிகள் பேரூராட்சிக்கு சொந்தமான நெல் களத்தை ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்துள்ளார்.

இதனால் அப்பகுதியில் உள்ள 900 ஏக்கர் விவசாய நிலங்களில் இருந்து வரும் நெல் களத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்..

தொடர்ந்து விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள நெல் களத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து மீட்டு மீண்டும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பழனி கோட்டாட்சியர் சரவணனிடம் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றாக இணைந்து கோரிக்கை மனுவினை அளித்தனர்.

மேலும் கீரனூர் பகுதியில் இதுபோன்று பல்வேறு இடங்களை கோயில் நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர் அவைகளை மீட்டு பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *