பாபநாசம் அருகே மேலவழுத்தூர் குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்குகள். அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்பு..

அச்சுறுத்தும் குரங்குகளை, வனத்துறையினர் பிடித்து செல்ல குடியிருப்பு வாசிகள் கோரிக்கை..

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே மேலவழுத்தூர் ஹாஜியார் தெரு சுற்றியுள்ள, குடியிருப்பு பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்தப் பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும் வீடுகளின் உள்ளே ஏராளமான குரங்குகள் புகுந்து சமைத்து வைத்த பொருட்களை தின்று விடுவதாகவும், தென்னை மரங்களில் தனது குட்டிகளோடு தாவி குதிக்கும் குரங்குகள் முற்றாத தேங்காய்களை பறித்து தண்ணீரை குடித்து விட்டு கண்ட இடங்களில் தூக்கி வீசுவதாகவும், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை வெளியே அனுப்புவதற்கு அச்சமான சூழ்நிலை நிலவுவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித பயனும் இல்லை என குற்றம் சாற்றும் பொதுமக்கள், தொடர்ந்து இப்பகுதி கிராம பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குரங்குகளை கூண்டுகள் வைத்து வனத்துறையினர் உடனடியாக பிடித்து சென்று, வனப்பகுதியில் கொண்டு விடுவதற்கு உண்டான, நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *