சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்கு இலவச சேவை வழங்கி வரும் இதயங்கள் அறக்கட்டளை தனது சேவையை இந்தியா முழுவதும் விரிவு படுத்த இருப்பதாக அதன் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்..

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்கு இலவச சிகிச்சைகளை கடந்த ஏழு வருடங்களாக கோவையை சேர்ந்த இதயங்கள் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

அறக்கட்டளையின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்,தலைமையில், 7 மாதம் குழந்தைகள் முதல் 20 வயது உள்ள மாணவ, மாணவிகள் வரை தமிழகத்தில் மட்டும், 20 ஆயிரம் குழந்தைகள் இவரிடம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இதயங்கள் அறக்கட்டளையின் ஏழாம் ஆண்டு விழா,கோவை காளப்பட்டி சாலையில் உள்ள,கெட்டிமேளம் மஹால் அரங்கில் நடைபெற்றது.. இதயங்கள் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமி நாதன் தலைமையில் நடைபெற்ற இதில்,சிறப்பு அழைப்பாளர்களாக, எழுத்தாளர் வரலோட்டி,ராசி சீட்ஸ் கவிதா ராஜேந்திரன்,
GD தொண்டு நிறுவனங்கள் அஞ்சனா குமார்,கே.எம்.சி.எச்.மருத்துவமனையின் துணைத் தலைவர் தவமணி பழனிசாமி,மருத்துவர் முருகானந்தம்,லட்சுமி செராமிக்ஸ் நிறுவனர் முத்துராமன்,டெக்ஸ்வேலி நிறுவனர் ராஜசேகர், ஆடிட்டர் பி எஸ் ஸ்ரீனிவாசன், ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் ஸ்வாஸ்யா ஆகியோர் கலந்து கொண்டனர்..

நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்,இதயங்கள் அறக்கட்டளை வாயிலாக இலவச சிகிச்சை பெறும் குழந்தைகள்,மாணவ,மாணவிகள் அவர் தம் குடும்பத்தனருடன் கலந்து கொண்டனர்.விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணன் சுவாமி நாதன் ,, 2017ல்,10 குழந்தை களுடன் ஆரம்பிக்கப் பட்ட இதயங்கள் அறக்கட்டளை தற்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 2000 குழந்தைகளுக்கு இலவச சிகச்சைகளை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

மேலும் இதயங்கள் அறக்கட்டளை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் சேவை செய்து வருவதாக குறிப்பட்ட அவர்,இந்த பணியை இந்தியா முழுவதும் விரிவு படுத்த உள்ளதாக அவர் கூறினார்.. ஒரு மொபைல் டயாபடீஸ் கிளினிக் வாகனம் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சென்று டைப் 1 டயாபட்டீஸ் உள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *